திங்கள், ஜூன் 02, 2008

உலகமயமாகும் உணவுப் பஞ்சம்

இன்றைக்கு பல நாடுகளின் முக்கியப் பிரச்சினை தீவிரவாதத்தின் மீதான போர் (War on Terrorism) அல்ல. உணவுப் பொருட்களின் திடீர்த் தட்டுப்பாடு. அத் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு. விழுந்து கொண்டிருக்கும் டாலர் மதிப்பின் காரணமாக தமது பொருளாதாரம் கண்ணுக்குத் தெரியாமல் தேய்ந்து வருவதை தடுத்து நிறுத்தச் சக்தியற்று, சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல் திகைக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் என, உலகம் ஒரு வகையான நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஏற்கனவே போராட்டங்கள் தொடங்கி விட்டன. பாராளுமன்றம் அளவில் விவாதங்களுடான கூச்சல் குழப்பங்கள் ஆரம்பித்துவிட்டன. சீனாவில், கிராமப்புறங்களில் விலைவாசிக்கெதிரான மக்களின் கொந்தளிப்பு ஊடகங்களில் வெளிவரவில்லை. ஹைட்டி (Haiti)யில் மஞ்சள் களிமண்ணால் ஆன ரொட்டியை சாப்பாடு மாதிரி தின்று தமது பசியைத் தற்காலிகமாக தடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த களிமண் பிஸ்கட் கூட தற்போது விலை ஏறிவிட்டதாம்.

பிரின்ஸ் துறைமுகம் (Port-au-Prince) நகரில் ஊர்வலமாகச் சென்ற ஹைட்டி நகர மக்கள் ஜனாதிபதி மாளிகையின் முன் எங்களுக்குப் பசிக்கிறது என்று கோஷம் போட்டு கலவரம் செய்திருக்கிறார்கள். நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். மெக்ஸிகோவின் முக்கிய உணவான டார்ட்டில்லாவில் பயன்படுத்த சோளம் இல்லையென்பதால் விலை உயரப் போய், அமெரிக்காவிலிருந்து வரவேண்டிய சோள இறக்குமதி மெக்ஸிகோவிற்கு வரவில்லை. காரணம், அமெரிக்காவிலேயே, பயோப்யூவல் (Bio-Fuel) கம்பெனி வைத்திருப்போர் கூடுதலாக விலை தருவதால், விளைகின்ற சோளம் எல்லாம் உயர்ந்து வரும் எண்ணெய் விலைக்கு ஆசைப்பட்டு, மெக்ஸிகோ மக்களின் வயிற்றுக்கு சென்றடையவில்லை. வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் அளவிற்கு சில நாடுகளுக்கு மட்டுமே பொருளாதார வலிமை உள்ளது.

ஈராக் மற்றும் டார்புர் பகுதிகளில் நிலைமை மிக மோசம். போரால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்கள் அகதி முகாம்களில் பிறர் தரும் உணவை நம்பி இருக்கின்றனர். அவர்கள் வேலை செய்வதற்கு நிலமும் இல்லை, அதற்குள்ள அமைதியான சூழலுமில்லை.

மத்திய கிழக்கின் முக்கிய விளைச்சல் நிலங்களை வைத்திருக்கும் ஈராக்கின் இன்றைய நிலைமை என்ன? லட்சக்கணக்கான மக்கள் உணவு உற்பத்தி செய்ய வேண்டியவர்கள், யாரோ தரப்போகும் ரொட்டித்துண்டுக்காக அகதி முகாம்களில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். சூடான் மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் ஒரு பக்கம் விளையும் தானியம் மறுபக்கத்திற்குச் செல்ல முடியாமல், அகதிமுகாம்களில் இருந்து கொண்டிருக்கும் மக்களுக்கு உணவு தரமுடியாமல் வளர்ந்த நாடுகள் தவித்துக் கொண்டிருக்கினறன.

துபாயில் அரசாங்கம் அடுத்த ஒரு வருடத்திற்கு உணவுப் பொருட்களின் விலை ஏறாமல் பார்த்துக் கொள்ளப் போவதாக வாக்குறுதியளித்திருக்கிறது. அரிசி விலையேறினால், குறைந்த கூலியில் வேலை பார்க்கும் இந்திய, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மக்களால் அங்கு தொடர்ந்து வேலை செய்ய முடியாது. ஏற்கனவே வரலாறு காணாத படிக்கு உயர்ந்து வரும் விலைவாசியைத் தாங்கும் பொருட்டு ஊதிய உயர்வு கேட்டு துபாயில் வேலை நிறுத்தம் நடந்த அதிசயத்தை உலகம் கண்டது.

இந்தோனேஷியாவில் அரிசி ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு போடப்படுகிறது. சிங்கப்பூரில் அரசு அரிசியைக் கூடுதலாக வாங்கி இருப்பில் வைத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. மலேசியாவில் இமிக்ரேஷன் பரிசோதனையில் அரிசி கடத்திச் செல்லப்படுகிறதா என்று சோதனைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் அரிசி ஏற்றுமதிக்கு முற்றிலும் தடைவிதித்துள்ளன.

இது வரை ஏற்பட்ட மாபெரும் உணவுப் பஞ்சங்களை ஆராய்ந்தோமானால், வெறும் 30 சதவீதம் உணவுப்பஞ்சங்கள் தான் இயற்கையால் வந்துள்ளன. மீதம் 70 சதவீதம் உணவுப் பஞ்சம் நாடுகள் பிடிக்கும் பேராசை மிக்க வல்லரசுகளின் போர்களால்தான் ஏறப்பட்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பஞ்சத்திற்கு காரணம் சற்றே வித்தியாசமானது (இதிலும் உலகமயம் தான்).

அமெரிக்காவின் நேரடிப்போர்கள் (ஈராக், ஆப்கானிஸ்தான், மற்றும் ஈரான்/சிரியா போர் ஆயத்தங்கள்) மற்றும் மறைமுகப் போர்கள் (ஆப்ரிக்க நாடுகளில் பெரும்பகுதிகளில்) ஒரு சிறிய காரணம்தான் என்றாலும், தற்போதைக்கு ஏற்பட்டிருக்கும் உணவுப் பஞ்சத்தின் பரிமாணம் சற்றே பெரியது. இது வரை இப்பஞ்சத்திற்கு இயற்கை ரீதியான காரணங்கள் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. வழமையான மழை பெய்கிறது. விளைச்சல் இருக்கிறது. ஆனால் மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை. என்ன மாதிரியான பஞ்சமிது.

இதைப் பற்றி அறிந்து கொள்ள கொஞ்சம் பொருளாதார ஞானமும் தேவைப்படுகிறது.

அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியைப் பற்றி அறிந்திராதவர்கள் இருக்க முடியாது. குறைந்த பட்சம் டாலர் வீழ்கிறது என்றாவது அறிந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு 15 மாதத்திற்கும் 1 டிரில்லியன் (1000 கோடி) டாலர் கடனாளியாக அமெரிக்கா மாறுகிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். தற்போது 13 டிரில்லியன் டாலர் கடனாளியாக இருக்கும் அமெரிக்கா தான் உலகிலேயே மிகப் பெரிய கடன்கார நாடு என்றால் அதிர்ச்சியடையாதீர்கள். ஆனால், அது தான் உண்மை. அமெரிக்க டாலர் வீழ்வதைத் தான் அமெரிக்க மத்திய வங்கி (ஃபெடரல் வங்கி) எதிர்பார்க்கிறது. 90களில் ஜப்பானின் யென் நாணயம் சந்தித்த அதே நிலையை இன்றைக்கு அமெரிக்க டாலர் சந்திக்கிறது. ஜப்பானிய வங்கிகளில் அதீதமான சேமிப்பு இருந்தது.

ஜப்பானியர் சிக்கனவாதிகள். அந்த சிக்கனவாதம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதளத்திற்கு இட்டுச் சென்று விடாமல் காப்பாற்றிற்று. ஆனால் அமெரிக்கர்களோ, பேரனால் கூட கட்ட முடியாத அளவிற்கு கடன் வாங்கி செலவு செய்கின்ற மனோநிலை உள்ளவர்கள். அங்கு சேமிப்பெல்லாம் இல்லை. எனவே, தற்போதைய வீழ்ச்சி எங்கு போய் முடியும் என்று சொல்ல முடியாத நிலை. ஏன் இந்த வீழ்ச்சி வந்தது என்றெல்லாம் விளக்க ஆரம்பித்தோமானால், விடிந்து போய்விடும். அதை தனியாக ஒரு பதிவாகப் போடலாம்.

எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வீட்டுக்கடன் பிரச்னையில் பெரிய பெரிய வங்கிகள் எல்லாம் சிக்கிக் கொண்டுள்ளன. 600 பில்லியன் டாலர் கடன் வீடுகளின் மேல் வராக் கடனாகப் போய் அடைந்து விட்டது. இது வரை 150 பில்லியன் டாலர்தான் நட்டமாக காட்டப்பட்டுள்ளது. மீதம் உள்ள 450 பில்லியன் டாலர் நட்டம் ஒவ்வொரு காலாண்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக காட்டப்படும். மொத்தமாக காட்டினால், பேங்க் திவாலாகும் என்று சொல்வார்களே அது நடக்கும். இங்கு ஒரு நாட்டின் நாணயமே திவாலாகிப் போகும்.

ஆகையால், வங்கிகள் சிறிது சிறிதாக நட்டம் காட்டுவார்கள். ஆனால், வீட்டிற்காக கடனாகக் கொடுக்கப்பட்ட அந்தப் பணம் வேறு யாரிடமோ, எங்காவது இருந்து தான் ஆக வேண்டும் இல்லையா. அந்தப் பணத்தை பணமாகவே வைத்துக் கொண்டிருந்தால், கரைந்துதானே போகும். எதிலாவது முதலீடு செய்ய வேண்டும். எதில் முதலீடு செய்வது என்று ஒரு பெரிய கூட்டமே வால்ஸ்ட்ரீட்டில் உட்கார்ந்து கொண்டு மண்டையை உடைத்துக் கொண்டு யோசனை செய்தார்கள்.

1960களிலேயே சிலபேர் கம்மோடிட்டீஸ் எனப்படும் மரபு சாரா நிதித்துறை முதலீடுகளில் (Non-traditional investment instruments) முதலீடு செய்ய ஆரம்பித்திருந்தனர். அதன் வளர்ச்சி, தங்கத்தின் மூலம் மட்டுமே பிரமிக்கத் தக்கதாக இருந்தது. தங்கம் மட்டுமல்லாது உணவுப் பொருள்கள், உற்பத்தி மூலப் பொருட்கள், எண்ணெய் போன்ற பொருட்களிலும் அவர்கள் ஃப்யூச்சர்ஸ் (FUTURES) என்ற வகை முதலீட்டைச் செய்திருந்தனர்.

எக்காலத்திலும், அதன் வளர்ச்சி சீராகவே இருந்தது. டாலர் போகும் போக்கைப் பற்றி அறிந்த, (சாதாரண மாதச்சம்பளம் வாங்குபவனுக்கெல்லாம் புரியாத விஷயமது), நெளிவு சுளிவு தெரிந்த அந்த நிபுணர்கள், நெருப்பில் மாட்டிய புழுபோல் தவித்தனர். எப்படியாவது, தமது நிறுவனத்தின் பணத்தை சரியான அளவில் முதலீடு செய்து போனஸ் வாங்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய அடிப்படை நோக்கம். வீழ்ந்து வரும் டாலரால் ஏற்படப் போகும் நஷ்டத்தைச் சரிகட்ட முயற்சிக்கும் பரபரப்பு அது.

ஃப்யூச்சர்ஸ் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளலாம். ஒரு பொருளை வருங்காலத்தில், அதாவது இன்ன தேதியில், இன்ன அளவிற்கு, இந்த விலை என்று ஆறு மாதத்திற்கு முன்போ அல்லது ஐந்து வருடத்திற்கு முன்போ கணிப்பது. அந்தக் காலக் கட்டத்தில் அந்தப் பொருளின் விலை, மேற்படி விலையை விட கூடுதலாக மார்க்கெட்டில் விற்குமேயானால், அந்த பத்திரத்தை விற்றவர், சொன்ன விலைக்குத் தான் விற்க வேண்டும். வாங்குபவர் சந்தையில் கிடைக்கும் கூடுதல் விலையின் வித்தியாசத்தில் கொள்ளை லாபம் பார்ப்பார். அதாவது, 2008 ஏப்ரல் மாதம் 30ம் தேதி, அரிசி ஒரு குவிண்டால், ஆயிரம் ருபாய் விற்கும் என்று, 10,000 டன்னுக்கு ஆறு மாதம் முன்பே அதாவது 2007 நவம்பர் 30ம் தேதியே, 10 ஆயிரம் டன்னுக்கான பணத்தை வங்கியில் கட்டி அல்லது அதன் 10 சதத்தை கட்டி (மீதத்தை வங்கி செலுத்தும்) அதை வாங்கிக் கொள்வது. நவம்பர் மாதத்தில் அரிசியின் விலை 700 ருபாயாக இருக்கலாம். அதனால், விற்றவர் நினைப்பார், நாம் 300 ருபாய் லாபத்திற்கு இதை விற்றிருக்கிறோம் என்று. ஆனால், ஏப்ரல் மாதத்தில் (எப்படியோ) அதன் விலை 1500 ருபாயாக ஆகிப் போயிருக்கும்.

வாங்கியவருக்கு 500 ருபாய் ஒரு குவிண்டாலுக்கு லாபம். விற்றவருக்கு லாபத்தில் தான் நட்டம். அப்படியென்றால் எத்தனை கோடி லாபம்? இதில் லாபம் தரக்கூடிய முக்கிய விஷயம், குறிப்பிட்ட தேதியில் அந்தப் பொருளுக்கு விலை ஏறியிருந்தால் தான். இல்லையென்றால் நட்டப் பட வேண்டிவரும். லாபம் வர வேண்டுமானால் விலை ஏற வேண்டும். தட்டுப்பாடு ஏற்பட்டால்தான் ஒரு பொருளின் விலை ஏறும். இப்போது இந்த விளையாட்டில் தட்டுப்பாடு எப்படி முக்கியக் காரணியாகிறது என்று புரிந்திருக்குமே?

ஜான் பால்சன் என்ற ஹெட்ஜ் ஃபண்ட் மேனேஜர் கடந்த ஒரு வருடத்தில் இந்தமாதிரி உணவுப் பொருட்களின் Futures மூலம் சம்பாதித்தது 3.7 பில்லியன் அமெரிக்க டாலர். ஒரு தனி நபர், இந்த அளவிற்கு போனஸ் பெற்றால், அவரை வேலைக்கமர்த்தியிருக்கும் நிறுவனம் எத்தனை கோடி சம்பாதித்திருக்கும். சம்பாதித்த பணம், வேறு எங்கு செல்லும்? மீண்டும், அதே விளையாட்டிற்குத் தான்.

பிலிப்பைன்ஸ் அரிசி உற்பத்திக் கேந்திரம் என்று நமக்கெல்லாம் தெரியும். அரிசி ஆராய்ச்சி நிறுவனம் எல்லாம் அங்கு உள்ளது. ஐஆர் ரக அரிசி எல்லாம் அங்குதான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு ஐந்து லட்சம் டன் அரிசி இறக்குமதிசெய்ய் அந்தநாடு போட்ட ஒப்பந்தம் திடீர் விலையேற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் ரேசனில் அரிசி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இருக்கின்ற பணத்தால் அரிசியை வெளி மார்க்கெட்டில் ஒரு அரசாங்கத்தாலேயே வாங்க முடியவில்லை என்றால், ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாடுகளையெல்லாம் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

சிங்கப்பூரின் நிலையெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான். இனிமேல், அவர்களும் விவசாயம் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டியதுதான். மலேசியாவில் ஒரு மாநிலத்தில் பல பில்லியன் டாலர் ஒதுக்கி, அரிசி விளைச்சலை அதிகரிக்கப் போகிறார்கள். உணவுப் பொருள் இறக்குமதிக்கெல்லாம் வெளிநாடுகளையெல்லாம் நம்பி இருக்க முடியாது என்பது தான் அதன் அர்த்தம்.

மேற்படி நிதித்துறை விளையாட்டு ஒரு காரணம் தான் என்றாலும், உயர்ந்து வரும் ரியல் எஸ்டேட் தரும் பணத்தால், விவசாயம் செய்வது என்பது அருகி வருகிறது. இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பொருந்தும். 7 சதவீத விளைநிலங்களை மட்டுமே வைத்துக் கொண்டு இந்த இரு நாடுகளும் பெரும்பான்மையான உணவுத் தேவைக்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றிருந்தன. WTO என்பது ஒரு வகையில் வரப்பிரசாதம்தான். ஆனால், உள்நாட்டு மக்கள் பட்டினி கிடக்கும் போது, உணவுப் பொருட்களை எந்த நாடாவது ஏற்றுமதி செய்ய முடியுமா? விவசாயம் பார்க்க மக்களுக்கு மனநிலை இல்லை. இயந்திரமயமாதல்தான் ஒரே வழி. ஆனால், உழ நிலம் வேண்டுமே? விவசாய நிலம் எல்லாம் வீடாகிக் கொண்டிருந்தால், என்ன செய்வது?

பயோப்யூவல் எனப்படும் உயிர்ம எரிபொருள், தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை, இந்த எரிபொருளை குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியாததால் இந்தத் துறை பின்தங்கியிருக்கிறது என்று முதலீட்டாளர்கள் பின் வாங்கிக் கொண்டிருந்தனர். தற்போது எண்ணெய்ப் பீப்பாய் விற்கும் விலையைக் கண்டால், அதைவிட குறைந்த விலையில் உற்பத்தி செய்து அதிக லாபம் பார்க்க முடியும் என்று, உயிர்ம எரிபொருள் கம்பெனிகளின் பின்னால் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கிறார்கள். சோளத்திலிருந்து, சோயாவிலிருந்து, ஏன் பாமாயில் கூட உயிர்ம எரிபொருள் தயாரிக்கப் போய்க் கொண்டிருக்கிறது. இதனால், மனிதன் சாப்பிடத் தேவையான உணவு வகைகள் விலை உயர்ந்து போவதை யாராலும் தடுக்க இயலவில்லை.லாபம் பார்க்க வேண்டியது தான். ஆனால், பசிக்கு பணத்தையா சாப்பிட முடியும்.

பங்குச் சந்தை நிதித்துறையில் வேலை பார்ப்பவர்கள், லாபத்தை மட்டுமே மனதிற்கொண்டு அரசாங்கங்களின் தலையீடுகள் இல்லாமல் ஆடுகின்ற இந்த ஆட்டம், அப்பாவி ஏழைகளை உலகெங்கும் கோபத்திற்குள்ளாகியிருக்கிறது. உணவுப் பஞ்சத்தையும் உலகமயமாக்கியிருக்கின்ற இந்தக் கொடுமை எப்பொழுது நிற்கும்? பசிக் கொடுமை தவிர்க்க முடியாத தடுக்க இயலாத புரட்சிகளைக் கொண்டு வந்து, ஆட்சியாளர்களைப் புரட்டிப் போட்டிருப்பதை வரலாற்றின் ஏடுகளில் நாம் கண்டிருக்கிறோம். ஒரு முறையல்ல, இரு முறையல்ல, நூற்றாண்டுகள் தோறும் இது நடந்திருக்கிறது.

- திருவுடையான்
நன்றி: WWW.KEETRU.COM

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//லாபம் பார்க்க வேண்டியது தான். ஆனால், பசிக்கு பணத்தையா சாப்பிட முடியும்?//

Good Question.
Will anybody answer it?

பெயரில்லா சொன்னது…

என்னதான் சொல்கிறீர்கள்?

உலகில் உள்ள அனைத்து தொழில்களையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு அனைவரும் வேட்டியை தார்பாய்ச்சி கட்டிகொண்டு விவசாயம் செய்ய வேண்டுமா?

அந்தளவிற்கு நிலம் இருக்கிறதா?

அல்லது அனைவரும் ஆடு,மாடை மேய்த்துக்கொண்டு பழைய கற்காலத்துக்கு திரும்ப வேண்டும் என்று சொல்கிறீர்களா?

கால மாற்றத்தில் சில பிரசினைகள் வரத்தான்செய்யும். அதை காலமே சரிசெய்யும் என்பது தான் வரலாறு.

பெயரில்லா சொன்னது…

சரி அனானி நீ என்னதான் சொல்ற சோத்துக்கு அடிச்சிக்கிட்டு செத்து போலாம்னு சொல்றியா? அவரு ஒன்னும் தொழில் மயத்துக்கு விரோதமா எழுதலையே? கட்டுரைய முழுசா படிச்சிட்டு பேசுடா வென்று...

பெயரில்லா சொன்னது…

அமெரிக்கா லாபம் ஈட்ட உலகில் உள்ளவர்கள் எல்லாம், உணவிற்கு அல்லாட வேண்டுமோ ! :(

கச்சா எண்ணெய் விலை, உணவு உற்பத்திக் குறைவு என்று ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லும் நிலையில், தங்களுடைய இந்த கட்டுரை மறுபக்கத்தைக் வெளிக்கொண்டுள்ளது.

இதற்கு என்னதான் தீர்வு ?

பெயரில்லா சொன்னது…

அனானியா பிளாக் நடத்தறீங்க..

அனானியா கமென்ட் போடறீங்க...

என்னமோ போங்கப்பா....

பெயரில்லா சொன்னது…

The lies of Thamizmani is exposed....

Please see the arugment that exposed his lies in Petrol price raise:

--XXX----

https://www.blogger.com/comment.g?blogID=861951875897267914&postID=1893544168856914715&page=1

Argument that exposed Thamizmani's lies...


Anonym hat gesagt...
This post says there is NO supply demand problem...

http://thiruvadiyan.blogspot.com/2008/05/1.html

10. Juni 2008 09:30


தமிழ்மணி hat gesagt...
சப்ளை அண்ட் டிமாண்ட் பிரச்னை இருக்கிறது. அவர் தொடர்ந்து எழுதப்போகிறார். முழுவதையும் பார்த்துவிட்டு கருத்து கூறுகிறேன்.

10. Juni 2008 09:41


Anonym hat gesagt...
as for as supply demand is considered, the post cleary give statistical numbers to deny your lies on Supply-demand problem.

This first post of him only meant to deny your claim. You better read that post again :-) the post clearly says that the price raise cannot justified with supply demand lie.

only his next post is going to talk about the problem of petrol price raise not the one given here. the post given here deals only with your lie - 'Supply demand problem'. You can answer that if you claim you are honest. :-P

May be you have difficulties understanding Graphs and Numbers :-)

10. Juni 2008 10:19


Anonym hat gesagt...
http://thiruvadiyan.blogspot.com/2008/05/1.html
//இதிலிருந்து தெரிவது என்னவென்றால், எண்ணெய் உற்பத்தியும் பயன்பாடும் சீராகவே இருக்கிறது. ஆனால் விலையேற்றம் மட்டும் அதற்கேற்ற அளவு சீராக இல்லாமல் தாறுமாறாக ஏறியிருக்கிறது. ஆக இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது.//

What is you take on this '---'Mani

10. Juni 2008 10:21


தமிழ்மணி hat gesagt...
நன்றி அனானி

அவர் முழுவதும் எழுதி முடிக்கட்டுமே. நான் பதில் எழுதுகிறேன். :-))

10. Juni 2008 10:26


தமிழ்மணி hat gesagt...
//இதிலிருந்து தெரிவது என்னவென்றால், எண்ணெய் உற்பத்தியும் பயன்பாடும் சீராகவே இருக்கிறது. ஆனால் விலையேற்றம் மட்டும் அதற்கேற்ற அளவு சீராக இல்லாமல் தாறுமாறாக ஏறியிருக்கிறது. ஆக இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது//

சொல்வதற்கு என்ன இருக்கிறது? அவரது புரிதல் அவ்வளவுதான்.

இந்த வருடம் மழை இல்லை என்றால், அடுத்த வருட அரிசி விலை மட்டுமே ஏறாது. இந்த வருடமே அரிசி விலை ஏற ஆரம்பிக்கும்.

முன்னரே பல முறை குறித்திருக்கிறேன். peak oil என்றால் என்னவென்று படித்து பாருங்கள்.

10. Juni 2008 10:31


பெத்த ராயுடு hat gesagt...
Please read this as well..

http://www.rediff.com/money/2008/jun/02mrv.htm

10. Juni 2008 10:31


Anonym hat gesagt...
You hope he will not write :-)...

I don't bother whether he writes or not...

what is your problem in denying these numbers?

I don't bother whether he writes or not. The numbers given in that article that matters. Those numbers content in themself - enough to deny your claims. Those numbers clearly say your claims are big Lies and you try to fool people around here.... :-)

and I here remember that till now you have never answered any questions that prove you are a leir...

I understand your problem '___mani'

10. Juni 2008 10:37


தமிழ்மணி hat gesagt...
நன்றி பெத்த ராயுடு,

இது war profiteering. ஆனால், peak oil பிரச்னை இருப்பதால்தான் இது போன்ற commodities tradingஇல் பணம் பண்ணுகிறார்கள்.

ஆனால், பீக் ஆயில் பிரச்னையை மாற்று எரிபொருள்களால்தான் தீர்க்கமுடியுமே தவிர, அமெரிக்காவின் டாலர், கம்மோடிடிடிஸ் டிரேடிங் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதால் தீர்க்க முடியாது.

10. Juni 2008 10:37


தமிழ்மணி hat gesagt...
நன்றி அனானி

நீங்கள் சொல்லும் முன்னரே அதற்கு பதில் எழுதிவிட்டேன்.

:-))

நன்றி

10. Juni 2008 10:39


தமிழ்மணி hat gesagt...
அனானி,
//you have never answered any questions//

check again, I have answered every question.

On the other hand, I am yet to see any answer from Asuran, Ekalaivan, dravidan, dravida muslium, etc.

Check this post itself.
I have even taken the questions from Asuran's blog and answered it here.

10. Juni 2008 10:42


Anonym hat gesagt...
Thanks Mr.Petharayudu. As his link rigtly points out that Oil also in Commodity-future trade market, which has a major role in the price raise is discussed by nobody till now... :-)

@@@@
The finding of US Senate Committee in 2006

In June 2006, when the oil price in the futures markets was about $60 a barrel, a Senate Committee in the US probed the role of market speculation in oil and gas prices. The report points out that large purchase of crude oil futures contracts by speculators has, in effect, created additional demand for oil and in the process driven up the future prices of oil.

The report further stated that it was 'difficult to quantify the effect of speculation on prices,' but concluded that 'there is substantial evidence that the large amount of speculation in the current market has significantly increased prices.'
@@@@@

I doubt whether '---mani' can atleast understand the above claims :-P

10. Juni 2008 10:46


Kommentar gelöscht
Dieser Post wurde vom Autoren entfernt.

10. Juni 2008 10:51


Anonym hat gesagt...
//check again, I have answered every question.//

Why cannot you answer my questions then :-)

You seem to believe you have clear idea about this petrol issue and others are fool, but when i simply give some numbers to deny your claims u try to hide your head :-)

very funny... ;-)

10. Juni 2008 10:51


Anonym hat gesagt...
@@@@
டிமாண்ட் சப்ளை பற்றி பேசும் இந்த அல்பவாதி அதற்க்கான புள்ளிவிவரங்களை தரலாமே.... டிமாண்டுக்கும், சப்ளைக்கும் உள்ள வித்திய்சாதத்துக்கும், தற்போது 135 டாலர் விலையேறியதற்க்கும் சம்பந்தமேயில்லை. ஏகாதிபத்திய மூலதனத்தின் சூதாட்டம் விலையேற்றத்தின் பின்னால் உள்ளது.
@@@@

This is what asuran wrote the numbers given by me prooves the above claim.

you are unwilling to answer the above asuran's and my questions, but still you try to fool people around here that u have answered all questions.... :-)

10. Juni 2008 10:54


தமிழ்மணி hat gesagt...
Of course I understand. That is just a blip in the history of price of Crude.

In the longterm, the price would come down to its mean demand and supply. And that price would be even higher than the current price.

http://www.iea.org/textbase/work/2004/cambodia/bj_session3.2-Ehara%20presentation.pdf

Check the above link.
That is what drives the price of crude.

Acutally even if Saudi increases the crude production to 12 from the current 9, the price of crude would still rise and would be even more than the current price in 10 years.

Enjoy!

Instead of accusing and finding fault with current govt, US and global oil companies, we should spend our brain on finding alternate energy resources and improve the current situation.

Companies in US, Japan and Europe are spending billions on hydrogen, fuelcells and other innovative technologies. The amount spent on these new techs are way more than the war profitteering these commodity speculators make.

Even if these technologies come to us free of cost, we would still be calling them imperialists, neocolonialists, neoliberalists and wasting our time like this.

This time can be best spent on finding new technologies that improve the life of a common indian rather than going on a rally to shout against the govt for the sake of these idathusari useless politicians.

10. Juni 2008 11:01


தமிழ்மணி hat gesagt...
டிமாண்ட் அண்ட் சப்ளை பற்றி கேட்டபோதெல்லாம் பீக் ஆயிலை பற்றி கூறிவந்திருக்கிறேன்.
ஒன்றுமே படிக்காமல், உளறிக்கொண்டே இருந்தால் என்ன செய்வது?

http://peakoil.com/

10. Juni 2008 11:07


Anonym hat gesagt...
the need of happurt thory(the peak oil bullshit) to the Corporate hoodlums can be explained latter... Not now dear '----Mani'.

Even in that case your claims in the article found no water related to that.

May be you can make ourself explantive ;-)

10. Juni 2008 11:09


Anonym hat gesagt...
the need of happurt thory(the peak oil bullshit) to the Corporate hoodlums can be explained latter... Not now dear '----Mani'.

Even in that case your claims in the article found no water related to that.

May be you can make yourself explantive ;-)

10. Juni 2008 11:10


Anonym hat gesagt...
@@@@
The finding of US Senate Committee in 2006

In June 2006, when the oil price in the futures markets was about $60 a barrel, a Senate Committee in the US probed the role of market speculation in oil and gas prices. The report points out that large purchase of crude oil futures contracts by speculators has, in effect, created additional demand for oil and in the process driven up the future prices of oil.

The report further stated that it was 'difficult to quantify the effect of speculation on prices,' but concluded that 'there is substantial evidence that the large amount of speculation in the current market has significantly increased prices.'
@@@@@

You forgot to read this '---mani'

10. Juni 2008 11:14


தமிழ்மணி hat gesagt...
அனானி,

சரிதான், பீக் ஆயில் புல்ஷிட்.

கம்யுனிஸ்டுகளுக்கு மட்டும் தோண்டுமிடமெல்லாம் தீராமல் பெட்ரோல் வந்துகொண்டே இருக்கும் போலிருக்கிறது.

ஏன் இப்படிக்கூட நீங்கள் மக்களிடம் புரட்சிக்கு ஆள் சேர்க்கலாமே?

" கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால், காவிரியில் தண்ணீருக்கு பதிலாக பெட்ரோலை ஓட வைப்போம். "

(அப்ப தண்ணிக்கு என்ன பண்றது என்று மக்கள் கேட்டால், கேட்டவனை எல்லாம் வர்க்க எதிரின்னு பெயர் சூட்டி சுட்டுத் தள்ளிட வேண்டியதுதான்..)

10. Juni 2008 11:14


தமிழ்மணி hat gesagt...
அனானி நண்பரே அதனைத்தான் நான் முன்னரே எழுதிவிட்டேன்.

//இது war profiteering. ஆனால், peak oil பிரச்னை இருப்பதால்தான் இது போன்ற commodities tradingஇல் பணம் பண்ணுகிறார்கள்.
//

10. Juni 2008 11:16


Anonym hat gesagt...
May be you can make yourself explanative ;-)

Why can't yourself explain other peoples that there is a relationship between this peak oil bullshit and price raise?

and deny our claim that demand-supply factor have very little role to play in the prsent petrol price raise...

I don't bother about communist state. why yourself assume me as a communist... :-)

You afraid of Commies.... haaha...haa.ha.

I understand your inablity... :-) whenever you have no answer you try to twist your argument in this direction...

10. Juni 2008 11:24


தமிழ்மணி hat gesagt...
நண்பர்களுக்கும், போல்போட் நண்பர்களுக்கும் ஒரு வார்த்தை.

சப்ளை அண்ட் டிமாண்ட் என்பது வெறுமே கட்ந்த காலத்தை மட்டுமே கொண்டதல்ல. எதிர்காலத்தின் நிலையையும் சேர்த்தது. அதற்காகத்தான் இந்த வருட அரிசி விலையை பற்றிய குறிப்பை எழுதினேன்.

இன்று பெட்ரோல் விலை ஏறுவது ஓரளவுக்கு நல்லது. அது மாற்று எரிபொருள்களை கண்டுபிடிக்கவும், பூமியின் சுற்றுச்சூழலை கெடுக்காமல் நாம் வளமாக வாழ நமக்கு தூண்டுதலாக இருக்கும்.

இந்த பெட்ரோல் விலை ஏற்றம் நம்மை அதனை நோக்கி சிந்திக்க வைக்க வேண்டும்.
--
அனானி,

நிச்சயம் கம்யூனிஸ்டுகளிடம் எனக்கு பயம் இருக்கிறது. ஏனெனில் அவர்கள் பொய்யர்கள், வன்முறை வழியை கொண்டவர்கள், இருப்பினும் தான் சொல்வது எல்லாம் உண்மையானது, எதிர்கருத்து சொல்பவனை எல்லாம் "....mani" என்றும் வர்க்க எதிரி என்றும் பெயர் சூட்டி கொலை செய்ய முயற்சிப்பவர்கள்.

நீங்கள் கம்யூனிஸ்டு இல்லை என்று சொன்னாலும் என்னால் நம்ப முடியவில்லையே? :-))
அவ்வளவு அறிவாக பேசுகிறீர்களே?

10. Juni 2008 11:43


Anonym hat gesagt...
though I have enough statistical and Factual proofs to deny the peak oil bullshit or the Hubbert theory, Let us cosider that Peakoil stuff is true.

But even in that case, the supply demand ratio is not the cause of the price raise but it is the speculative nature of the market which is manipulated mainly by Big financial corporates and Petro companies(USA primarily) who exploit this situation are the reason behind the price raise. I don't know whether in Commuist state this kind of Gambling will be allowed or not, but the USA capitalists are thriving because of this, even though the American people themself in difficult situation.

This is the reason behind many of those make claims on american lead World corporates as responsible for this situation.

@@@@
The finding of US Senate Committee in 2006

In June 2006, when the oil price in the futures markets was about $60 a barrel, a Senate Committee in the US probed the role of market speculation in oil and gas prices. The report points out that large purchase of crude oil futures contracts by speculators has, in effect, created additional demand for oil and in the process driven up the future prices of oil.

The report further stated that it was 'difficult to quantify the effect of speculation on prices,' but concluded that 'there is substantial evidence that the large amount of speculation in the current market has significantly increased prices.'
@@@@@

@@@@@@
Today's oil prices are believed to be determined by the four Anglo-American financial companies-turned-oil traders, viz., Goldman Sachs, Citigroup, J P Morgan Chase, and Morgan Stanley. It is only they who have any idea about who is entering into oil futures or derivative contracts. It is also they who are placing bets on oil prices and in the process ensuring that the prices of oil futures go up by the day.
@@@@@@

If you are soooo honest you should expose those who make money out of people's plight. If you are soo honest you should ask for control over this Speculative commodity market Viz Gambling.

You support the Gambling and resulting sufferings of the people.

And your claims are nowhere represented... :-) Sad.... :-P

10. Juni 2008 11:55


Anonym hat gesagt...
Hi Friends,
I read MR Venkatesh's article cited bive in Rediff. He gets the problem exactly in reverse.

Read this paragraph. He builds up a scenario where he is accusing speculation by USA funds managers and at the end tells point blank : He is not sure. Of course.

"Do the oil speculators know of this reserves build-up by the US and are indulging in rampant speculation? Are they acting in tandem with the US government? Worse still, are they bordering on recklessness knowing fully well that if the oil prices fall the US government will be forced to a 'Bears Stearns' on them and bail them out? One is not sure. "

Commodities trading is exactly what it is : It is a gamble just as the Horse racing or Lotto. If the prediction comes true he wins, if not he loses. Many Hedge funds have gone belly up trading in such a gamble. This is like saying "Wipro's stock price is determined by stock exchange listing and many people buying the stock. " No : Wipro builds up value only when the company performs well and then it results in price rise.

In the present price rise is there a room for speculation? Yes, but not by traders, but by OPEC members. Saudi Arabia, Venezuela stand to benefit from this and not USA.

USA has built the reserves but it has nothing to do with the price. By law USA has to build the reserve and it acts as a buffer. If the reserves are released, yes the supply will increase and thus there will be a fall in price but it will be only short term.

Thanks

Old Anony

10. Juni 2008 11:59


தமிழ்மணி hat gesagt...
Thank you and I agree.

As I said this is war profiteering. And the govts should crack down on the war profiteering and the speculative traders on behalf of the people. There is no denying in that. As I wrote earlier,

// அதே நேரத்தில் இந்த தனியார் கம்பெனிகள் தங்களுக்குள் கூட்டு சேர்வதையோ, அல்லது மோனோபோலி அண்ட் ரெஸ்ரிட்க்டட் டிரேட் பிராக்டிஸஸ் செய்வதையும் பொதுமக்களின் காவலனாக இருந்து கவனித்து தடுக்க வேண்டும். //

But there is denying the fact that the oil has become a scarce commodity. And the scarcity will continue to increase. We do not need any hubbart theory or anything to know this. It is simple common sense.
--

You never exposed all the lies of the original article by Seithikal and asuran, all of which are exposed here.

go figure!

10. Juni 2008 12:02


தமிழ்மணி hat gesagt...
நன்றி பழைய அனானி

That is perceptive!

10. Juni 2008 12:04


Anonym hat gesagt...
Anybody wants to deny the USA Senate findings? May be Old Annony can able to do that....

While Senate finding itself says the substantial role played by Speculative market gambling in the price of Petrol, this guy just(just) deny that....


@@@@
The finding of US Senate Committee in 2006

In June 2006, when the oil price in the futures markets was about $60 a barrel, a Senate Committee in the US probed the role of market speculation in oil and gas prices. The report points out that large purchase of crude oil futures contracts by speculators has, in effect, created additional demand for oil and in the process driven up the future prices of oil.

The report further stated that it was 'difficult to quantify the effect of speculation on prices,' but concluded that 'there is substantial evidence that the large amount of speculation in the current market has significantly increased prices.'
@@@@@

10. Juni 2008 12:05


Anonym hat gesagt...
///But there is denying the fact that the oil has become a scarce commodity. And the scarcity will continue to increase. We do not need any hubbart theory or anything to know this. It is simple common sense. //


we have that common sense and we are not denying that. But you try to fit two unrelated stuffs togather to give impression you like to portray... That is what been exposed here :-)....

The price raise - is the situation created by the world corporate capital by exploiting the situation in Oil market. This is what we claim... The price raise is unrealistic...

And you have accpeted that in the course of the argument:-).. Then what are you arguing for... If you like to argue who is resposible for the Scarcity or deblition of Oil that can be debated in different platform. The issue what we are discussing here is on the culprits behind petrol price raise...

and your claims prooved lie in that aspect... and you seem to delibratly deviated the people from the real issue....

To bad you are.....

10. Juni 2008 12:13


தமிழ்மணி hat gesagt...
அனானி,

//Commodities trading is exactly what it is : It is a gamble just as the Horse racing or Lotto. If the prediction comes true he wins, if not he loses. //

இதுதான் பழைய அனானி எழுதியது. அதில் பலர் ஈடுபட்டு பணம் பண்ணுகிறார்கள் என்பதை அவர் மறுக்கவில்லை. அதே நேரத்தில் அதுமட்டுமே விலையை நிர்ணயிக்கிறது என்பதை மறுக்கிறார்.

இது போல டிரேடிங்கில் ஈடுபட்டு பல பில்லியன் டாலர்கள் இழந்த நிறுவனங்கள் அமெரிக்கா ஐரோப்பாவில் இருக்கின்றன. சமீபத்திய சப் பிரைம் கிரிடிட் இதே போல கிரிடிட் ஒர்த்தியே இல்லாத ஏராளமான ஏழைபாழைகளுக்கு வீடு வாங்க பணம் கொடுத்து திவாலான ஏராளமான வங்கிகள் பற்றி படிக்கவில்லையா? அதுவும் இது போன்றதே.

10. Juni 2008 12:14


தமிழ்மணி hat gesagt...
அனானி,

இந்த வருடம் மழை பெய்யாததால், இந்த வருடம் அரிசி விலை உயர்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள், வியாபாரிதான் விலையை உயர்த்தினான் என்று சொல்கிறீர்கள்.

நான் இந்த வருடம் மழை பெய்யாததால், அடுத்த வருடம் அரிசி பஞ்சம். அதனால் முன்கூட்டியே விலை ஏறுகிறது என்று சொல்கிறேன்.

அரிசி விலை இன்று ஏறினால் என்ன லாபம்? குறுங்கால பயிர்கள், அல்லது இதர மாற்று உணவுகளில் ஈடுபடுவோம். அடுத்த வருட அரிசி பஞ்சம் வரும்போது சமாளிக்க முடியும்.

அரிசி விலையை கட்டாயமாக குறைத்தால் என்ன ஆகும்? மக்கள் அதே வளமையாக வழக்கம்போல இன்று அரிசி சாப்பிடுவார்கள். அடுத்த வருடம் அரிசி பஞ்சம் வரும்போது சாவார்கள்.

10. Juni 2008 12:21


Anonym hat gesagt...
Please deny this man...

@@@@
The finding of US Senate Committee in 2006

In June 2006, when the oil price in the futures markets was about $60 a barrel, a Senate Committee in the US probed the role of market speculation in oil and gas prices. The report points out that large purchase of crude oil futures contracts by speculators has, in effect, created additional demand for oil and in the process driven up the future prices of oil.

The report further stated that it was 'difficult to quantify the effect of speculation on prices,' but concluded that 'there is substantial evidence that the large amount of speculation in the current market has significantly increased prices.'
@@@@@

10. Juni 2008 12:23


Anonym hat gesagt...
ExxonMobil announced $8.4 billion in first quarter profits Thursday.

@@@@@
And it's time for the oil company executives to be held accountable. Exxon-Mobil, record-breaking profits, money going straight from our credit cards at the gasoline pumps right into the boardrooms, so the CEO of Exxon can retire with a $400 million gold watch farewell gift.
@@@@

You know, as the USA senate report claim what you disclaim, the USA senate is right now debating on the profit looted by USA Oil coporates due to this unrealistic oil price gambling...

And you are claiming here something unrealistic tooo... ;-)

10. Juni 2008 12:29


Anonym hat gesagt...
The PDF you gave is full of Lies...

It says the total global oil stocks (excluding Russia, China, south africa) is 6 billion barrel

You know one thing... The oil reserves of Non OPEC countris itself run in Trillion.(OPEC countries have much more than this)

10. Juni 2008 12:34


Anonym hat gesagt...
@@@@@@
It says the total global oil stocks (excluding Russia, China, south africa) is 6 billion barrel

You know one thing... The oil reserves of Non OPEC countris itself run in Trillion.(OPEC countries have much more than this)
@@@@@@@

Your Peak oil theory also found no ground to stand :-)))

10. Juni 2008 12:36


Anonym hat gesagt...
@@@@
அரிசி விலை இன்று ஏறினால் என்ன லாபம்? குறுங்கால பயிர்கள், அல்லது இதர மாற்று உணவுகளில் ஈடுபடுவோம். அடுத்த வருட அரிசி பஞ்சம் வரும்போது சமாளிக்க முடியும்.

அரிசி விலையை கட்டாயமாக குறைத்தால் என்ன ஆகும்? மக்கள் அதே வளமையாக வழக்கம்போல இன்று அரிசி சாப்பிடுவார்கள். அடுத்த வருடம் அரிசி பஞ்சம் வரும்போது சாவார்கள்.

@@@@

Neither people responsible for Foor price raise or Oil price raise Nor they stopped the growth of Food production or Oil production.. This all done by those who making money out of this situation and for all their greed for big money you like to punish the people...

You are a real good American Imperialist rep Dude... :-P

10. Juni 2008 12:39


தமிழ்மணி hat gesagt...
link please

10. Juni 2008 12:40


Anonym hat gesagt...
google.com - this is the link... you can search and get the numbers...

10. Juni 2008 12:42


Anonym hat gesagt...
@@@
You know, as the USA senate report claim what you disclaim, the USA senate is right now debating on the profit looted by USA Oil coporates due to this unrealistic oil price gambling...

And you are claiming here something unrealistic tooo... ;-)
@@@@

You surrender here or Still wants to fight? ;-P

10. Juni 2008 12:43


Anonym hat gesagt...
Saudi itself has reserve of:

@@@@
According to British Petroleum Statistical Review of World Energy, as of 2007 Saudi Arabia reported it had 264 billion barrels (42×109 m3) of estimated oil reserves, around 21% of conventional world oil reserves.[12] Since Saudi Arabia produced about 3.2 billion barrels (510×106 m3) of oil in 2006, this would give it over 80 years of reserves at current rates of production.
@@@@

It is from your favorite Wikipedia

10. Juni 2008 12:49


Anonym hat gesagt...
@@@@
Including the portion of oil sands reserves considered by government regulators to be producible at current prices using current technology, Canada's proven oil reserves were estimated at 179 billion barrels (28×109 m3) as of 2007, placing it second only to Saudi Arabia.[16] Over 95% of these reserves are in the oil sands deposits in the province of Alberta. [17] Although Alberta contains nearly all of Canada's oil sands and about 75% of its conventional oil reserves, several other provinces and territories, especially Saskatchewan and offshore Newfoundland, have substantial oil production and reserves.[18] Total Canadian oil production was about 1.2 billion barrels (190×106 m3) in 2006, giving Canada about 150 years of reserves at current production rates.
@@@@

Your Hebbert theory (Peak oil) is lieing the people for the sake of market looting for the past 50 years like this....

10. Juni 2008 12:53


தமிழ்மணி hat gesagt...
mm. You dont seem to understand tamil or English. What other language you know? I will try that.

// அதே நேரத்தில் இந்த தனியார் கம்பெனிகள் தங்களுக்குள் கூட்டு சேர்வதையோ, அல்லது மோனோபோலி அண்ட் ரெஸ்ரிட்க்டட் டிரேட் பிராக்டிஸஸ் செய்வதையும் பொதுமக்களின் காவலனாக இருந்து கவனித்து தடுக்க வேண்டும். //

This is what I wrote in the original article. This is what US govt is doing. That is a good thing.

But the global picture of scarcity and the even more price rise of oil resources remain. (Unless Mao pours petrol from the sky for the leftists.)

இதே கம்மிகள் இந்திய அரசாங்கம் பெட்ரோலில் கொள்ளை அடிக்கிறது, 57 சதவீத வரி போட்டு அடிக்கிறது என்றெல்லாம் உளறினார்கள்.

பெட்ரோலுக்கு மானியம் கொடுக்கும் அரசாங்கம் எப்படி அதில் கொள்ளை அடிக்க முடியும் என்று கேட்டேன். அதற்கு பதில் இல்லை.

ஆனால், அதே போல்போட் கம்மி ஆட்கள் "---mani" என்று திட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்.

தவறுக்கு வருந்தவேண்டியவர்கள் கம்மிகள்தான்.

10. Juni 2008 12:56


vikram hat gesagt...
United states senate committee questioned oil company executives about price increases. I guess that this was a political stunt in election year. Nothing worthwhile came from that inquiry.

When prices increase like this, people usually accuse speculators, but global oil industry is too huge to be controlled by speculators. Citibank determines oil prices?.If this is true, still it changes nothing. Because, Citibank is owned by arab prince abdullah. Many american banks are owned by arabs.

10. Juni 2008 12:58


Anonym hat gesagt...
There is no Supply demand problem as the hebber theory is lieing now and it was lieing for the past 50 or so years.....

And your article lost sense completely... Really pathetic to see your situation.... :=(

10. Juni 2008 12:59


தமிழ்மணி hat gesagt...
நண்பரே,
கவனித்தீர்கள் என்றால், current production rate என்று கூறியிருப்பார்கள். பிரச்னை என்னவென்றால், சீனாவும் இந்தியாவும் அமெரிக்கா அளவுக்கும், அதற்கு மேலும் பெட்ரோலை உபயோகிக்க இருக்கின்றன. அதுதான் அந்த பிடிஎப் சொல்லுகிறது.

கனேடிய மணலிலிருந்து எண்ணெய் எடுப்பது ஒரு நல்ல செய்தி.

அது இன்னும் சில வருடங்கள் பெட்ரோலை போட்டு கொளுத்த நமக்கு வாய்ப்பு.

10. Juni 2008 13:00


Anonym hat gesagt...
Your claim on hebber theory also disproved...

The oil reserves are well available for atleast 40 years....

Do you mean to say the market price is increasing for what is going to happen after 40 years?

What are you going to do now....

10. Juni 2008 13:01



Anonym hat gesagt...
The PDF says the world stock right now is 6 billion...

But the truth is

Saudi has 200 or so billion,

Canada has some 170 or so billion(as bitumen)

Iran, iraq has combined 250 or so billion

Kuwait has 104 billion..

venezula has some billions, Russia has...

These all established... And there much more reserves available unverified, Un explored...

Where in the hell the PDF finds oly 6 Billion stock of oil??

:-P

தமிழ்மணி hat gesagt...
நன்றி விக்ரம்

அனானிக்கு கோஷம் போட கூட்டம் சேர்க்க வேண்டும்

ஆகவே என்ன சொன்னாலும் அவருக்கு "புரியாது"

10. Juni 2008 13:04


தமிழ்மணி hat gesagt...
//The PDF says the world stock right now is 6 billion...

But the truth is

Saudi has 200 or so billion,

//

ஸ்டாக் என்பது வேறு ரிசர்வ் என்பது வேறு.

சற்று சரியாக படிக்கவும்.

10. Juni 2008 13:07


vikram hat gesagt...
/These all established... And there much more reserves available unverified, Un explored.../

where?in which planet?

All available technology, satellites everything has been used to hunt for oil.No major discoveries in past.Why?Not a drop of oil reserves is left on the earth to be drilled.

Nobody is betting that huge oil reserves will be found in future.Nobody knows how much oil saudis have.Saudis are experts in lying.

10. Juni 2008 13:07


தமிழ்மணி hat gesagt...
ஸ்டாக் என்பது வெளியே எடுக்கப்பட்ட பெட்ரோலியம். இதில் கப்பலில் சென்று கொண்டிருக்கும் பெட்ரோல், அங்கங்கு கிடங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் ஆகியவை.

10. Juni 2008 13:10


vikram hat gesagt...
If you say oil prices are high in India, compare the rest of the world. Oil costs $11 a gallon in Turkey, $8-9 a gallon in Europe.

In India it costs $5 a gallon, In USA it costs $4 a gallon.

In Europe, historically governments have always taxed oil and have kept their price high.In that way they have managed to keep oil consumption and dollar flow to saudis in control.Pollution control and carbon emission control are other benefits.

So $5 or $6 a gallon price in India is not bad at all.We are slightly ahead of USA and slightly behind Europe in oil prices.

10. Juni 2008 13:12


Anonym hat gesagt...
http://en.wikipedia.org/wiki/Oil_reserves

This wikipedia the favorite reference of Thamizmani is claiming sooo.. and there are lot many links and established facts to bolsters my claim.

First let yourself go there and see the various links given(including the links for statements from Big oil explorers).

Yourself better differentiate between stocks and Reserve...

10. Juni 2008 13:12


Anonym hat gesagt...
@@@
ஸ்டாக் என்பது வெளியே எடுக்கப்பட்ட பெட்ரோலியம். இதில் கப்பலில் சென்று கொண்டிருக்கும் பெட்ரோல், அங்கங்கு கிடங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் ஆகியவை.
@@@@

Diffinetly your hebbert theory is not talking about this...

10. Juni 2008 13:13


Anonym hat gesagt...
your Peak oil bullshit become real shit.... ;-P.... Pathetic....

10. Juni 2008 13:14


தமிழ்மணி hat gesagt...
நன்றி விக்ரம்

--

அனானி,

உங்கள் கிளைம் என்ன?

பெட்ரோலுக்கு பஞ்சம் வரவே வராது என்பதா?

இந்தியாவிலும் சீனாவிலும் அதிகமாக பெட்ரோலிய உபயோகம் இல்லை என்பதா?

எதிர்காலத்தில் இந்தியாவிலும் சீனாவிலும் மற்ற மூன்றாம் உலக நாடுகளிலும் உபயோகம் அதிகரிக்காது என்பதா?

current production capacity and current utilization capacity எப்பொதும் நிரந்தரமாக ஒரே எண்ணாக இருக்கும் என்பதா?

இவைகளுக்கு என்ன ஆதாரம் கொடுத்திருக்கிறீர்கள்?

ஒவ்வொன்றுக்கும் ஆதாரம் கொடுங்கள். இல்லையேல் சும்மா நேரத்தை வீணடிக்காதீர்கள்.

நான் தவறு என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கமில்லை. ஆனால் சும்மா வெட்டியாக பேசுவதில் விருப்பமில்லை.

10. Juni 2008 13:17


Anonym hat gesagt...
Okay guys... I am leaving.. I have lots of good things to do.. I never use to engage in this kind of Bullshit arguments... But this time your lies reached the true extend of Vulgurness... So I couldn't control myself...

I have exposed the lies, to my hearts fullest satisfaction and to the abysmal debacle of Thamizmani(are you happy i have spelled your name currectly)....

So bye for now....

10. Juni 2008 13:18


Anonym hat gesagt...
your claim is on unfounded lie called 6billion... better you can put the numbers in right way and proove there is a real Peak oil bullshit is bear gripping the oil market...(to help you i have given the numbers:-)

10. Juni 2008 13:19


Anonym hat gesagt...
Do you really know Hebbert theory or fooling people around here with big unknown words...

The hebbert theory(peak oil) talks not about Stocks....

If you like to stick to the 6billion PDF you have to relinquish on Peak oil... or else Viz versa...

A stalemate for you.... ;-)

10. Juni 2008 13:22


Anonym hat gesagt...
let yourself burn your midnight oil... I will see you after your leftover brain burnt completely...

See guys.. next time do home work properly....

10. Juni 2008 13:23


Anonym hat gesagt...
let yourself burn your midnight oil... I will see you after your leftover brain burnt completely...

See u guys.. next time do home work properly....

10. Juni 2008 13:23


Anonym hat gesagt...
YOu asked this:
@@@
பெட்ரோலுக்கு பஞ்சம் வரவே வராது என்பதா?
@@@@

I have already told this and have given enough numbers to proove this:
@@@@

Your claim on hebber theory also disproved...

The oil reserves are well available for atleast 40 years....

Do you mean to say the market price is increasing for what is going to happen after 40 years?

What are you going to do now....

@@@@@

Now you have tell and give proof to ascertain, where in the world the Peak oil bullshit decide the market price of Oil

10. Juni 2008 13:27



தமிழ்மணி hat gesagt...
பாவம் அனானி
பிடிஎஃப் இந்தியாவின் தேவை எவ்வளவு அதிகரிக்கிறது என்று சொல்கிறது.
பீக் ஆயில் ஒரு global phenomenonஆக எப்படி உலகெங்கும் நாடுகளின் தேவை அதிகரிக்கிறது, அதற்கேற்ப உற்பத்தி அதிகரிப்பதில்லை என்று சொல்கிறது.

எங்கே முரண்பாடு?

கம்யூனிஸ்டுகளின் வழக்கம்போல தனக்குத்தானே வெற்றி என்று அறிவித்துக்கொண்டு ஓடுகிறார்.

நல்லது.
--
மீண்டும் கேட்கிறேன்
அனானி,

உங்கள் கிளைம் என்ன?

பெட்ரோலுக்கு பஞ்சம் வரவே வராது என்பதா?

இந்தியாவிலும் சீனாவிலும் அதிகமாக பெட்ரோலிய உபயோகம் இல்லை என்பதா?

எதிர்காலத்தில் இந்தியாவிலும் சீனாவிலும் மற்ற மூன்றாம் உலக நாடுகளிலும் உபயோகம் அதிகரிக்காது என்பதா?

current production capacity and current utilization capacity எப்பொதும் நிரந்தரமாக ஒரே எண்ணாக இருக்கும் என்பதா?

இவைகளுக்கு என்ன ஆதாரம் கொடுத்திருக்கிறீர்கள்?

ஒவ்வொன்றுக்கும் ஆதாரம் கொடுங்கள். இல்லையேல் சும்மா நேரத்தை வீணடிக்காதீர்கள்.

நான் தவறு என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கமில்லை. ஆனால் சும்மா வெட்டியாக பேசுவதில் விருப்பமில்லை.

10. Juni 2008 13:29


Anonym hat gesagt...
Hi friends ,

I dont know which 2006 senate report you are referring.

Please read carefully this report

http://energy.senate.gov/public/_files/Sankeytestimony.pdf

The answers are all there. This is of course the testimony of a Bank executive before the committe.

The theory that speculation drives the market is false as it can not sustain the increase for so many days. It will only be very short term.

Old Anony

10. Juni 2008 14:53


Anonym hat gesagt...
This is a Testimony - This is not committe report.

And for ---Mani,

You claim the current Price drive is due to SUpply demand issue.

I say there is no justification by means of Supplt demand issue, as the price raise is un realistic.

And to prove this I have given the numbers on Supply and Demand. This numbers nowhere justify the current price raise. After this you hide your argument behind Hebbert theory, To disprove that I gave numbers of available oil reserves in the world, which can run in to atleast 40 years considering all worst cases.

What else do you want from me....

Now it is you have to set right these numbers or disprove these numbers to make your claim as right.... It is that simple boy... :-)

10. Juni 2008 22:54


11. Juni 2008
Annony
The role of market speculation in rising oil and gas prices.

A need to put the cop back on the beat.

By Permanent sub committe on Investigation
of the committee on homeland security and governmental affairs US senate.
June 2006

http://hsgac.senate.gov/public/_files/SenatePrint10965MarketSpecReportFINAL.pdf
---XXX---

This is not any financial institutions testimony. This is the report of US Senate committee...

Some Excerpts:

"""
The traditional forces of supply and demand cannot fully account
for these increases. While global demand for oil has been increasing—
led by the rapid industrialization of China, growth in India,
and a continued increase in appetite for refined petroleum products,
particularly gasoline, in the United States—global oil supplies
have increased by an even greater amount. As a result, global inventories
have increased as well. Today
"""

""
Accordingly,
factors other than basic supply and demand must be examined.
For example, political instability and hostility to the
United States in key producer countries, such as Nigeria, Ven-...
"""

""""
The large purchases of crude oil futures contracts by speculators
have, in effect, created an additional demand for oil, driving up the
price of oil to be delivered in the future in the same manner that
additional demand for the immediate delivery of a physical barrel
of oil drives up the price on the spot market. As far as the market
is concerned, the demand for a barrel of oil that results from the
purchase of a futures contract by a speculator is just as real as the
demand for a barrel that results from the purchase of a futures
contract by a refiner or other user of petroleum.
Although it is difficult to quantify the effect of speculation on
prices, there is substantial evidence that the large amount of speculation
in the current market has significantly increased prices.
Several analysts have estimated that speculative purchases of oil
futures have added as much as $20–$25 per barrel to the current
price of crude oil, thereby pushing up the price of oil from $50 to
approximately $70 per barrel.
""""

கருத்துரையிடுக