''ராஜீவ் கொலை வழக்கில் சந்திராசாமி தொடங்கி, பல பெருந்தலைகள் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், விசாரணை அதிகாரிகள் அந்தப் பெருந்தலைகளைத் தப்ப வைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்!'' - காங்கிரஸ் பிரமுகரான திருச்சி வேலுசாமியின் தொடர் முழக்கம் இது. ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன், பல்நோக்கு கண்காணிப்புக் குழுவை அமைத்ததற்கு முக்கியக் காரணமே வேலுசாமியின் அஃபிடவிட்தான். ஏழு தடவை அதில் விசாரிக்கப்பட்டவர் இவர். பேரறி வாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் எந்த நேரத்திலும் தூக்கு என்கிற நிலையில் நாம் வேலுசாமியை சந்தித்தோம்.
''ராஜீவ் கொலை வழக்கில், விசாரணை அதிகாரிகளின் குளறுபடிகளாக நீங்கள் எவற்றைச் சுட்டிக்காட்டுகிறீர்கள்?''
''குறிப்பிட்டுச் சொல்வது என்ன... விசாரணை அதிகாரிகள் செய்த அனைத்துமே திட்டமிட்ட குளறுபடிகள்தான். மகாத்மா காந்தியின் கொலை வழக்குடன் ராஜீவ் கொலை வழக்கை ஒப்பிட்டுப் பார்த்தால்தான், அதிகாரிகளின் குளறு படிகள் அப்பட்டமாகப் புரியும். மகாத்மா சுடப் பட்ட உடனேயே
கோட்சேவை போலீஸ் வளைத்தது. கோட்சே கையில், 'இஸ்மாயில்’ எனப் பச்சை குத்தப்பட்டு இருந்தது. அதனால், 'மகாத்மாவைக் கொன்றது ஒரு முஸ்லிம்தான்!’ என அதிகாரிகள் அவசரப்பட்டு அறிவிக்கவில்லை. அதிகாரிகளின் நுணுக்கமான புலனாய்வால், அந்த ஆபத்து தடுக்கப்பட்டது. ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் நடந்தது என்ன? மே 21-ம் தேதி இரவு ராஜீவ் கொலை நடந்தது. அடுத்த நாள் காலை 9 மணிக்குத்தான் விசாரணை தொடங்கியது. ஆனால், விசாரணை தொடங்கும் முன்னரே, 'ராஜீவைக் கொன்றது புலிகள்தான்’ என அறிவித்தார், அப்போதைய சட்ட அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி. ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் சிவராசன், தணு, கோகிலவாணியின் முகங்களை அடையாளம் காட்டியது. அந்தப் படத்தில் தணுவின் நெற்றியில் பொட்டு இல்லை. ஆனால், இறந்துகிடந்த தணுவின் நெற்றியில் குங்குமப் பொட்டு இருந்தது. அது எப்படி? 'ராஜீவைக் கொலை செய்தவர் இந்து தமிழ்ப் பெண்’ எனக் காட்ட நடந்த சதிதான் அது. பிணத்தின் நெற்றியில் பொட்டு வைத்ததுதான் புலனாய்வா... அவர்கள், இன்னும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்?''
''பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் ராஜீவ் கொலை விவகாரத்தில் துளியும் சம்பந்தம் இல்லை என்கிறீர்களா?''
''பேரறிவாளன், திராவிடர் கழகத்தில் இருந்த வர். கொலை நடந்து 20 நாட்கள் கழித்து ஜோலார் பேட்டைக்குப் போய் பேரறிவாளன் எங்கே என விசாரிக்கிறது போலீஸ். பேரறிவாளனின் தாய், 'அவனை நானே உங்களிடத்தில் அழைத்து வருகிறேன்’ எனச் சொன்னார். அதன்படியே, அடுத்த நாள் சென்னைக்கு வந்து பேரறிவாளனை சந்தித்தார். அப்போது அவர்களை வளைத்த போலீஸ், 'சாதாரண விசாரணை’ எனச் சொல்லி பேரறிவாளனை அழைத்துச் சென்றது. உண்மையிலேயே ராஜீவ் கொலையில் பேரறிவாளன் சம்பந்தப்பட்டு இருந்தால், வலிய வந்து போலீஸ் விசாரணையை எதிர்கொண்டு இருப்பாரா? பெற்ற தாயே அவரை போலீஸிடம் நிறுத்தி இருப்பாரா?
பேரறிவாளன் ஈழத்துக்குப் போய் பிரபா கரனை சந்தித்ததாகவும், 'சாத்தானின் படைகள்’ என்கிற புத்தகத்தைத் தயாரித்ததாகவும் கற்பனைகளைப் பரப்பியே அவரைத் தூக்கு வரை நிறுத்திவிட்டார்கள்.
சாந்தன் விஷயத்தில் அவருடைய பெயரே அவருக்கு எதிரியாகிவிட்டது. திருச்சி சாந்தன் என்கிற குண்டு சாந்தன் இறந்துவிட்டார். பெயர்க் குழப்பத்தால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம் ம.தி.சாந்தன் மீது திணித்து, அவரையும் கயிறுக்கு முன்னால் நிறுத்திவிட்டார்கள். நளினியின் கணவர் என்பதாலேயே முருகனை வளைத்தார்கள். ஒரு பெண் குழந்தையின் தாய் என்பதால், நளினியின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. ஒரு தாய்க்குக் காட்டும் கருணையை தந்தைக்குக் காட்டாத விந்தையை எங்கே போய்ச் சொல்வது?''
''ராஜீவ் கொலையில் சந்திராசாமிக்கு தொடர்பு இருப்பதாகத் தொடர்ந்து சொல்கிறீர்களே... எதைவைத்து?''
''பெல்ட் பாம் தயாரிக்க பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் கைதுக்குக் காரணம் சொல்கிறார்கள் அதிகாரிகள். பெங்களூரு ரெங்கநாத் என்பவர், 'பெல்ட் பாமை யாகத்தில் வைத்து சந்திராசாமி ஆசீர்வதித்தார். சம்பவத்தை முடித்துவிட்டு வரும் சிவராசனை பெங்களூர் வழியாக நேபாளம் அனுப்பிவைப்பதாகவும் சொல்லி இருக்கிறார்’ என தடா கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். உடனே ரெங்கநாத்தை விசாரிக்கச் சொல்லி கோர்ட் உத்தரவிட்டது. அப்போதைய விசாரணை அதிகாரி டேபிள் வெயிட்டால் ரெங்கநாத்தை அடித்து, 'உண்மையைச் சொல்லாதே’ என மிரட்டி இருக்கிறார். பல்நோக்கு கண்காணிப்புக் குழுவை அமைக்கச் சொன்ன ஜெயின் கமிஷன், அதில் முதல் ஆளாக விசாரிக்கச் சொன்னதே சந்திராசாமியைத்தான். 'இவருடைய நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடம் அளிப்பதாக இருக்கின்றன’ என ஜெயின் கமிஷன் பட்டவர்த்தனமாகச் சொன்ன பிறகும், அவரிடம் விசாரணை நடத்தப்படவே இல்லை. என்னிடம்கூட ஏழு முறை விசாரணை நடத்தினார்கள். 'ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், அப்பாவி கள் தண்டிக்கப்படக் கூடாது’ என்பதுதான் நீதியின் நியதி. ஆனால், சந்தேகத் திமிங்கிலங்கள் வெளியே உலவ, அப்பாவிகள் தூக்கு மேடை முன் நிற்கிறார் கள்!''
''தூக்குத் தண்டனையை அரசு சீக்கிரமே நிறை வேற்ற முயல்வதாகச் சொல்லப்படுகிறதே?''
''ராஜீவ் கொலை யானபோது எடுக் கப்பட்ட வீடியோ பதிவு எம்.கே.நாராயணனிடம் கொடுக்கப்பட்டது. இன்று வரை மக்களின் பார்வைக்கு அந்த விவரங்கள் தெரிய வில்லை. கொலை நிகழ்ந்தபோது சந்திரா சாமி எங்கே இருந்தார் என்பதற்கு இன்று வரை பதில் இல்லை. ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கியப் புள்ளிகளை வளைக்க பல்நோக்கு கண்காணிப்புக் குழு இன்று வரை விசாரணை நடத்தி வருகிறது. நாளைக்கே ஒரு நபரை அந்தக் குழு குற்றவாளியாக நிறுத்தினால், அதற்கு சாட்சியாக இந்த மூவரில் ஒருவர் தேவைப்படலாம். இப்போது தூக்கில் போட்டு விட்டால், முக்கியக் குற்றவாளியை நிறுத்தும் போது செத்தவர்களை உயிரோடு கொண்டு வருவார்களா?''
- இரா.சரவணன்
படம்: என்.விவேக்
நன்றி: ஜூனியர்விகடன் 31 ஆகஸ்ட் 2011நன்றி:
ஈழப் படுகொலைகள் உண்டாக்கிய துயரமே தமிழக மனங்களில் ரணமாக வடியும் நிலையில், தூக்குக் கயிறு வடிவில் மீண்டும் துரத்தத் தொடங்கி இருக்கிறது துயரம். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் மரணத்தின் நிழலில் நிற்கிறார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தளர்த்தக்கோரி இவர்கள் அனுப்பிய கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூவரையும் காப்பாற்றக் கோரி கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழகம் முழுக்க உணர்வும் உருக்கமுமான போராட்டங்கள் நடக்கின்றன. மரணத்தின் துரத்தலில் வாடும் அந்த மூவரின் மனப் போராட்டங்களையும் அறிய முடிவெடுத்தோம். வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம். அதன் தொகுப்பு இங்கே...
சூழ்ந்திருக்கிறது. மக்களின் ஒருமித்த கைகோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது. 19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்!''
''தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?''
''கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம். இந்த வேதனையைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும்.
சிவராசனின் பணத்தை முதலில் காந்தன் என்பவர் கையாண்டார். அவரிடம் இருந்து நான் அந்தப் பொறுப்பினை எடுத்துக்கொண்டதாக நீதிபதி வாத்வா அவர்கள் தீர்ப்பில் கூறுகிறார். சிவராசனின் பணத்தை நான் பாதுகாத்து கொடுத்ததாகவோ கையாண்டதாகவோ விசாரணை நீதிமன்றம் என்னிடம் கேட்டுப் பதிவு செய்யவில்லை. இப்படி எல்லாம் குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகளே எங்களுக்கான முடிவுப் படிகளாக மாறிவிட்டன!''
தொடர்பாக ஒரு புகாரையும் துரைசாமி அத்துடன் அளித்துள்ளார். அந்த ஆடியோ, நமக்கும் கிடைத்தது.
முதியவர்: ''நீ சொல்லிடு... பெரியவா சொல்லிட்டாங்க. ஒரு வாரத்தில் வந்துடும்னு...''
ஜெயேந்திரரின் கருத்தை அறிய காஞ்சிபுரம் மடத்தில் ஆஜரானோம். மடத்தின் அலுவலர்களின் அனுமதியுடன், தியான மண்டபத்துக்கு அருகில் தனி அறையில் பக்தர்களுக்கு ஆசி தந்துகொண்டு இருந்த ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்தித்து நம் விசிட்டிங் கார்டைக் கொடுத்தோம். சட்டென முகம் சிவந்து நம்மை வெளியே போகுமாறு சைகையால் சொன்னார்.
அற்புதம் அம்மாளின் துயரத்துக்கு வயது 20. 1991இல் அது போல ஒரு ஜூன் மாத மதிய பொழுதில் தான் சும்மா விசாரணைக்கு என்று அவர் மகன் பேரறிவாளனை அழைத்துச் சென்றது காவல் துறை. விசாரணைக்கென்று சென்ற அறிவு இன்னும் வீடு திரும்பவில்லை. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல் மட்டும் வந்தது. பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. இன்று அற்புதம் அம்மாளின் மகன் அறிவு ஒரு மரண தண்டனைக் கைதி.
மேடைக்கு அனுப்புவது நியாயமா?’ என்பதுதான் அதிர்ச்சிக்குரிய முக்கியக் குரல்!
பணம் இல்லை. ஆனால், என் சீடர்களிடம் வாங்கிச் செலுத்திவிடுவேன்!’ என்று சொன்னார் சந்திராசாமி. பணத்தை உடனடியாகக் கட்டிவிட்டு, வெளிநாடு சென்றார். சந்திராசாமி இதுவரை அமலாக்கத் துறைக்கு 65 கோடி வரை கட்ட வேண்டிய பாக்கி உள்ளதாக அத்துறையின் வக்கீல் நீதிமன்றத்தில் கூறினார். அப்படிப்பட்ட சந்திராசாமியை வளைக்காமல் இருக்கிறார்களே என்பதுதான் தமிழ் உணர்வாளர்களின் முக்கியக் கேள்வியாக இருக்கிறது!
ஸ்பெக்ட்ரம் ஊழலும் அதன் அம்பலமும் அது தொடர்பான விசாரணையும் ஒரு சாதாரண ஊழல் விவகாரம் சார்ந்தது அல்ல என்ற எளிய உண்மையை விளக்கிப் புரிய வைக்க மிகுந்த பிரயத்தனம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது ஒரு சுவாரசியமான முரண்நகைதான். கிளப்பிவிட்ட சூத்ரதாரிகளான மாறன் சகோதரர்களுக்கு எதிராகவே ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் திரும்பும் சமயம் இது. பாட்டிலில் அடைக்க முடியாத ஒரு பூதத்தை திறந்துவிட்டிருக்கிறோம் என்று 'கேடி பிரதர்ஸ்' என செல்லமாக அறியப்படும் கார்ப்பரேட் - அரசியல் அதிபர்கள் காலம் கெட்ட பிறகு வருந்தக்கூடும். பிசினஸ் போட்டியில் தொடங்கி, அரசியல் அரங்கிற்கு மாறிய இது வரையிலான கார்ப்பரேட் மோதல்களுக்கு மாறாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 21ஆம் நூற்றாண்டிற்கே உரிய வகையில் ஒவ்வொரு அங்கத்திலும் அரசியலும் கார்ப்பரேட் மோதலும் பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்கிறது. தங்களின் குடும்பத் தொழில் செழிக்க உதவிய தொலைதொடர்புத் துறை தங்கள் பிடியிலிருந்து பறி போனதற்குப் பழிவாங்குவதற்காகத்தான் மாறன்கள் இந்த ஊழலை அம்பலமாக்கினார்களா? டாடாவின் டி.டி.ஹெச். நிறுவனத்தில் பங்குகள் கேட்டு மாறன்கள் மிரட்டியதாக கூறப்பட்ட நிலையில், தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது நடந்த 2ஜி ஒதுக்கீட்டின் முறைகேடுகள் குறித்த சமீபத்திய அம்பலங்களின் பின்னணியில் டாடாக்கள் இருக் கிறார்களா?
ஸ்பெக்ட்ரம் விசாரணை எதுவரை பாயும், எது வரை பாயாது என்பது முற்றிலும் சட்டத்திற்குட்பட்டது அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். ஆ.ராசாவின் 2ஜி அலைவரிசை ஊழலில் நேரடி தொடர்பு இருந்தாலும் ரத்தன் டாடாவும் அனில் அம்பானியும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மற்றவர்களிடம் கடுமை காட்டி வரும் நீதித்துறை ரத்தன் டாடாவையும் அனில் அம்பானியையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது. அவர்கள் அளவுக்குப் பெரிய தொழிலதிபர் அல்லாத ஷாகித் பல்வா மட்டும் கம்பிகளின் பின்னால் ஜாமீன் இல்லாமல் தொடர்கிறார். அதனால் கலா நிதி மாறனின் உயரம் விசாரணைக்கு உட்படுத்தும் அளவில் இருக்குமா, இல்லையா என்பது கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால் தங்களின் அகந்தையாலும் அடாவடித்தனங்களினாலும் மாறன் குடும்பத்தினர் சம்பாதித்திருக்கும் எதிரிகளின் எண்ணிக்கை தராசை அவர்களுக்கு எதிராகத் திருப்பக்கூடும்.
கனிமொழி சிறை சென்ற பிறகே மாறன்கள் வலையில் சிக்குகிறார்கள் என்பதால் இதில் சி.ஐ.டி. காலனி சக்திகளின் பங்கு இருக்கிறது என நம்பப்படுகிறது. சிவசங்கரன் சி.ஐ.டி. காலனிக்கு நெருக்க மானவராகவே அறியப்படுகிறார். ஒரு காலத்தில் முரசொலி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த அவரையே மாறனின் புதல் வர்கள் பதம் பார்த்தார்கள். சிவசங்கரனை ஒரு வழக்கில் சிக்க வைத்து, சிறையில் தள்ள 'கேடி பிரதர்ஸ்' முயன்றதாக கூறப்படுகிறது. சிவசங்கரன் நாட்டை விட்டு ஓடி தப்பித்த நிலையில், அவரின் வயதான பெற்றோரைக் கம்பிக்குப் பின்னால் நிறுத்தி பிளாக்மெயில் செய்ய திட்டம் தீட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த விரோதத்தால் உந்தித் தள்ளப்படும் சிவசங்கரன் மட்டுமே மாறன் சகோதரர்களை சிறையில் தள்ளப் போதுமானது அல்ல. நுஸ்லி வாடியா தனது தந்தையுடனான சண்டையில் வெற்றி பெற ஜே.ஆர்.டி. டாடாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தார். அதே போல மாறன் சகோதரர்களால் பாதிக்கப்பட்ட ரத்தன் டாடா, ஸீ டி.வி. குழுமத்தின் சதீஸ் சந்திரா முதலிய சக்திகள் தங்களின் செல்வாக்கையெல்லாம் சி.ஐ.டி. காலனியின் இந்த முயற்சிக்குப் பின்னால் ஒன்று திரட்டினால்தான் ஜெகஜ்ஜால கில்லாடிகளான கேடி சகோதரர்கள் வசமாக சிக்குவார்கள். தி.மு.க.வும் அதன் தொண்டர்களும்கூட மாறன்களுக்கு எதிராகத் திரும்புவதால் சிவசங்கரனைத் தங்களின் பிரம்மாஸ்திரமாக சி.ஐ.டி. காலனி பயன்படுத்துகிறது. தங்களின் சிறைவாசத்திற்கு முழு காரணம் என சி.ஐ.டி. காலனி நம்பும் மாறன்களையும் தங்கள் வரிசையில் திகாரில் அடைக்கும்வரை அவர்கள் ஓயப் போவதில்லை. எனினும் எஸ் டெல் என்ற நிறுவனம் மூலம் மறைமுகமாக 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற சிவ சங்கரனுக்கு எதிராகவும் ஸ்பெக்ட் ரம் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவரின் வாக்குமூலம் மட்டுமே மாறன்களை வீழ்த்தப் போவதில்லை. மாறாக, மாறன்களுக்கு எதிரான சாட்சியங்களாக ராசா ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறப்படும் தொலைதொடர்பு அதி காரிகள்தான் கேடி பிரதர்ஸின் கதையை முடிக்கும் கடைசி ஆணி களாக இருக்கப் போகிறார்கள்.
மோசடிகளின் மீது கட்டமைக்கப்படும் அம்பானிகளின் சாம்ராஜ்ஜியம் ஒரு நாள் ஒட்டுமொத்த இந்தியாவையும் விழுங்கப் போகிறது என்ற நுஸ்லி வாடியாவின் எச்சரிக்கையை 1980களில் யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. டாடா, பிர்லாவைப்போல அம்பானிகள் வளர்வார்கள் என அன்றைய தலைமுறை கார்ப்பரேட்கள் நம்பாததால் வாடியா உளறுகிறார் என நினைத்தார்கள். இன்று அதே வர்ணனை மாறன்களுக்குப் பொருந்தும். தங்கள் பிசினஸ் வெற்றிக்காக அத்தனை வஞ்சகங்களிலும் ஈடுபடக்கூடிய 21ஆம் நூற்றாண்டின் அம்பானிகளாகத் திகழும் மாறன்கள் தென்னிந்திய டி.வி. சந்தையை ஏற்கனவே தங்கள் மூர்க்கமான பிடியில் வைத்திருக்கிறார்கள். மலிவு விலை விமான சேவைத் தொழிலைக் கைப் பற்றும் அவர்களின் முயற்சிக்கு தற்காலிக தடை மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. 1980களில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜவுளித் தொழிலை வியாபித்தபோது, பிற்பாடு பல்வேறு துறைகளையும் அவர்கள் வளைத்துப் போடுவார்கள் என யாரும் கற்பனை செய்யவில்லை.

பிரியம் அண்ணாவுக்கு. இன்று ஆட்சியிலும், கட்சியிலும் இருக்கும் பல எம்.பி-க்கள், மந்திரிகள் எல்லோரையும் கைதூக்கிவிட்டவர் இளங்கோவன்அய்யாதான்!
இன்னொரு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். இரண்டு மருத்துவமனைகளிலும் மருத்துவச் செலவே, இரண்டு மூன்று லட்சங்கள் ஆகிவிட்டது. அங்கே இங்கே என்று அலைந்து, நண்பர்களின் உதவியால்தான் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிந்தது. 'அண்ணாவின் மகன் மருத்துவச் செலவுக்குக்கூட வழியின்றிதான் இறந்துபோனார்’ என்கிற உண்மை, அண்ணாவைத் தங்கள் கொடிகளில் எல்லாம் வைத்திருக்கும் கட்சிக்காரர்களுக்குத் தெரியுமா?
கட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் இவர் மிகவும் கவனமாக இருந்தார். 'தகுதி இருந்தால் தலைவன் ஆகலாம்!’ என்றவர் அண்ணா. அதற்கு ஏற்றபடியே வாழ்ந்தும் காட்டினார். அந்தப் பெருமைகொண்ட குடும்பத்தாரின் மாண்பு, 'தனயனாக இருந்தால், தலைவன் ஆகலாம்!’ என்று இன்று வாரிசு அரசியல் நடத்துபவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது!'' என்று வருத்தத்துடன் முடித்தார் சண்முகராஜ்.
ஐ. நா. வின் பல மனித உரிமை ஒப்பந்தங்களில் இலங்கை கையெழுத்திட்டிருக்கிறது. அதனால், மனித உரிமைமீறல்களுக்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் கடமை அதற்கு இருக்கிறது. சுதந்திரம் பெற்றதிலிருந்தே மனித உரிமைமீறல்களுக்கெனப் பல்வேறு குழுக்களை அமைத்து, தவறு செய்தவர்கள்மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறது. 1977இல் அமைக்கப்பட்ட சாம்ஸோனி குழு, 1991இல் அமைக்கப்பட்ட கக்கடிச்சோலை குழு, 2001இல் இன வன்முறை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அதிபரின் உண்மை அறியும் குழு, 2006இல் அமைக்கப்பட்ட அதிபரின் விசாரணைக் குழு போன்றவை இவற்றில் சில. 2010ஆம் ஆண்டில், படிப்பினைகள் மற்றும் சமாதானக் குழு ஒன்றை இலங்கை அரசு நியமித்தது. இந்த விசாரணைக் குழுக்களுக்கு என்ன ஆனது? பல சமயங்களில் விசாரணைக் குழுக்கள் அறிக்கைகள் எதையும் தாக்கல் செய்யவேயில்லை. அப்படியே இக்குழுக்கள் அறிக்கைகளைத் தாக்கல் செய்தாலும் அவற்றின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவற்றை ஓரம்கட்டியது. இந்த அறிக்கைகளில் ஒருபோதும் அரசு நிர்வாகம்மீதோ அதிகாரிகள்மீதோ எந்தக் குற்றச்சாட்டும் இருக்காது. அரசு தற்போது நியமித்திருக்கும் படிப்பினைகள் குழுவுக்கும் இதே கதிதான் நேரும் என இலங்கை விவகாரத்தைக் கவனித்துவரும் நிபுணர்கள் கருதுகின்றனர். 


