வியாழன், டிசம்பர் 18, 2008

இலங்கை போர்முனையில் இந்திய ராணுவ ஆலோசகர் !

இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய 7 நாடுகளின் ராணுவ ஆலோசகர்கள் கடந்த திங்கள்கிழமை இலங்கை போர்முனைக்கு சென்று பார்வையிட்டனர். இதனை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இலங்கை ராணுவத்தின் ஏற்பாட்டின்பேரில் வன்னி போர்முனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு நடைபெற்று வரும் சண்டை குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.


சண்டையில் சரணடைந்த விடுதலைப் புலிகள், முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்காக செயல்படுத்தப்படும் நிவாரணப் பணிகள் போன்றவற்றை அவர்கள் நேரில் பார்வையிட்டதாகவும் இலங்கை ராணுவ இணையதளம் தெரிவிக்கிறது.

நன்றி: தினமணி

3 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//சண்டையில் சரணடைந்த விடுதலைப் புலிகள்//

இதேப்ப நடந்தது.

வனம் சொன்னது…

வணக்கம்

ஆமா நாம அனுப்பின உதவிப்பெருள்கள் என்ன ஆச்சு

அத பாத்தாங்களாமா?

நன்றி
இராஜராஜன்

யாத்ரீகன் சொன்னது…

ஒரு மாநில மக்களே குமுறுக்கொண்டிருக்கும்போது , அப்படி ஒன்றுமே நடக்காதமாதிரி மத்திய அரசாங்கம் நடந்துகொள்வதை எதிர்த்துக்கேட்க்க இயலாத அரசு இயந்திரம் இருந்தென்ன, போயென்ன..

கருத்துரையிடுக