வெள்ளி, மே 23, 2008

மஞ்சள்காமாலை தடுப்பூசி தேவையா? - மரு. வீ. புகழேந்தி MBBS

குறிப்பிட்ட ஒரு நோயால் ஒரு நாட்டில் ஒரு இடத்தில் அதன் பாதிப்பு, இறப்புவிகிதம் அதிகம் இருக்குமானால், தடுப்பூசியின் காரணமாக அது உறுதியாக தடுக்கப்படும் என்று அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டிருந்தால், செலவுகுறைந்த மாற்று வழிகளில் அதை தடுக்கமுடியாது என இருக்கும் சமயத்தில் மட்டுமே தடுப்பூசியை பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
.
நம் நாட்டில் மஞ்சள்காமாலை தடுப்பூசியை நடைமுறைப்படுத்த, அரசு மருத்துவர்கள் மற்றும் மருந்துக் குழுமங்கள் சொல்கின்ற காரணம்.
1. இது ஒரு ஆட்கொல்லி நோய்.
2. இதன் பாதிப்பு மக்களிடையே மிகவும் அதிகம். 10% மக்கள் மஞ்சள் காமாலை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
3. இந்நோய் பாதிப்பின் காரணமாக ஈரல் முழுவதுமாக பாதிக்கப்பட்டு இறப்பு நிகழ்வது.
4. இந்நோய் காரணமாக ஈரல் புற்றுநோய் பாதிப்பால் பலரும் இறப்பது.
5. இந்த தடுப்பூசி நம்பகமானது, பாதுகாப்பானது... போன்றவை.
.
இனி, இவை உண்மைதானா? இந்த தடுப்பூசி அறிமுகப்படுத்தப் படுவதற்கு மக்கள் நலன்தானா காரணம்? என பார்க்கலாம். ஹைதராபாத்தைச் சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் பாஸ்கர் ராவ் என்ன சொல்கிறார் என பார்ப்போம்.
.
"ஆட்கொல்லி நோயாக கொள்ளை நோயாக இருக்கும் பட்சத்தில் மட்டும் (அல்லது) கொள்ளை நோயாக உருவாகககூடிய அபாயமுள்ள நோய்களுக்கு எதிராக மட்டுமே தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும். இந்தியாவைப் பொறுத்தமட்டில் மஞ்சள்காமாலை கொள்ளை நோயாகவோ அல்லது அப்படி உருவாகவோ வாய்ப்பு இல்லை என்பதை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது ஆட்கொல்லி நோய் என்பதும் உண்மைக்கு புறம்பானது. இதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலோர் தானாகவே இயல்பு நிலைக்கு திரும்பி விடுகின்றனர்".
.
இது பற்றி உலகின் மிகச்சிறந்த வல்லுநர் மருத்துவர். ஷீலா செர்லாக் கூறுவது. "மஞ்சள் காமாலை ஏற்படுத்தும் இக்கிருமிகள் (ஹெபாடைடிஸ் பி) 100 பேர் உடம்பில் உட்புகும் போது 95 பேருக்கு அதன் உடனடி தாக்கம் தெரியும். அதில் 94பேர் தானாகவே இயல்பு நிலைக்கு திரும்பி விடுவர்". இவ்வியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானவர்களுக்கே இறப்பு நிகழும் போது இதை எப்படி ஆட்கொல்லி நோய் என அழைக்க முடியும்?
.
இந்தியாவைப் பொறுத்தவரை இதன் உடனடித் தாக்கத்திற்கு ஆளானவர்கள் குறித்த புள்ளி விபரங்கள், ஆய்வுகள் இல்லை. இக்கிருமி காரணமாக பாதிப்பு ஏதும் சிறிதளவு இல்லாமலும், ஆனால் அதே சமயம் இக்கிருமியை பிறருக்கு பரப்பக்கூடிய தன்மை கொண்டவர்கள் பற்றிய ஆய்வு, புள்ளிவிபரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
.
இவ்வாய்வுகளில் நோய் சுமப்பவர்கள் 1.62% - 4% எனத் தெரியவந்துள்ளது. அதிலும் 1% இவ்வியாதியின் தீவிர பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். ஆக விஷயம் இப்படி இருக்க அனைத்து குழந்தைகளுக்கும் இத்தடுப்பூசிகள் போடுவது தேவை தானா? கொழுத்த வியாபாரியான பில்கேட்சுக்கு நம் குழந்தைகள் நலன் மீதுதான் அக்கறையா?
.
பின்விளைவுகளால், அமெரிக்காவில் அனைத்து குழந்தைகளுக்கும் மஞ்சள்காமாலை தடுப்பூசி போடப்படுவது, நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் அந்த குழந்தைகள் மீது இல்லாத கரிசனம், நம் குழந்தைகள் மீது மட்டும் எழக் காரணமென்ன? இந்தியாவிலே நல்ல, தரமான மஞ்சள்காமாலை தடுப்பூசி குறைந்த விலையிலேயே உற்பத்தி செய்யப்படுகிறபோது இதனை வாங்குவதற்குப் பதிலாக உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் விலை உயர்ந்த மருந்துக்குழுமத்தில் இருந்து வாங்கி பயன்படுத்துவதை, வெளிநாட்டு மருந்து குழுமத்தின் வணிக நலனை கருத்தில் கொண்டதாகவும் நம் குழந்தைகளை சோதனை விலங்குகளாக மாற்றுவதாகவுமே எடுத்துக் கொள்ள முடியும்.
.
வெளிநாட்டு உதவியுடன் நடக்கும் தடுப்பூசித் திட்டங்கள் இந்திய குழந்தைகளை பரிசோதனை விலங்குகளாக மாற்றும் நோக்கத்துடனேயே செய்யப்படுவதை யுனிசெப் அஸ்ஸாமில் செய்த ஆய்வில் 15 குழந்தைகள் (போலியோ) இறந்ததையும், கேரளாவில் திருவனந்தபுரத்தில் புற்றுநோய் ஆய்வில் ஏற்பட்ட பிரச்சினைகளையும், ஹைதராபாத்தில் மரபணு மாற்றத் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மருந்தினை (இரண்டிலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள்/அமைச்சகம் இருந்து அனுமதி பெறாமலே) பரிசோதித்தது குறித்து வழக்கு தொடரப்பட்டிருப்பதையும், கிளாக்சோ மருந்து நிறுவனம் கிறித்தவ மடங்களின் உதவியோடு அனாதை குழந்தைகளிடத்து எய்ட்ஸ் மருந்தின் பின்விளைவுகளை அனுமதி பெறாமலே சோதித்ததும் - மக்கள்மீது இவர்கள் கொண்டுள்ள அக்கறையை தோலுரித்து காட்டியுள்ளது.
.
மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பு 10% மக்களுக்குள்ளது எனும் தவறான புள்ளிவிபரத்தை அரசு/மருத்துவர்கள்/மருந்துக்குழுமங்கள் சொல்ல காரணமென்ன? மக்கள் நலனா? வணிக நலனா?
.
அரே சுக்கர்மேன் எனும் புகழ்பெற்ற மருத்துவர் மஞ்சள் காமாலை (ஹெபாடைடிஸ் பி) காரணமாக பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் (90%க்கு மேல்) தானாகவே இயல்பு நிலைக்கு திரும்புவர் என்பதும் 1% கீழ் தான் பாதிப்பு மோசமாக இருப்பதும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க பொது சுகாதார சேவை, அமெரிக்க குழந்தை மருத்துவர் சங்கம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்காவில் 1997ல் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுக்க வேண்டும் எனும் ஆணை திரும்ப பெறப்பட்டது. அதே ஆண்டு தொற்றுநோய் தடுப்பு அமைச்சகமும் மஞ்சள் காமாலை பாதிக்கப்படாத தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட வேண்டும் என்பதை திரும்ப பெற்றுக்கொண்டது.
.
அமெரிக்க அரசு மஞ்சள் காமாலையால் கருவுற்ற பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது மட்டும் பிறக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மீதிக்குழந்தை களுக்கு இது தேவையில்லை. ஏனெனில் இந் நோய் பெரும்பாலும் பெரியவர்களை மட்டுமே பாதிக்கக்கூடிய நோயாக உள்ளதால் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசியால் பலன் அதிகம் இல்லை என்று அறிவித்துள்ளது.
.
இனி மஞ்சள்காமாலை தடுப்பு குறித்து உலக வல்லுநர்களின் கருத்து:
.
1. சிறுகுழந்தைகளுக்கு (1 வயதிற்கு கீழ்) மஞ்சள் காமாலை தொற்றும் வாய்ப்பு 1-3% மட்டுமே - அமெரிக்க பொதுசுகாதாரத்துறை.
2. கருவுற்ற பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலொழிய பிறக்கும் குழந்தைகளுக்கு இந்நோய் தொற்றும் வாய்ப்பு மிக மிகக்குறைவு. அதனால் அனைத்து குழந்தைகளுக்கும் இது கொடுக்க வேண்டிய தேவையில்லை (1999ம் ஆண்டு அறிக்கை) - அமெரிக்க அரசு.
3. மஞ்சள் காமாலையால் பெரும்பாலும் பாதிக்கப்பட முடியாத பிறந்த குழந்தைகள்/சிறு குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி தேவையில்லாமலே கொடுக்கப்படுகிறது. - பார் கிரிஜ்ஜின்மக்கி.
4. இந்த தடுப்பூசியால் எவ்வளவு காலம் பாதுகாப்பு கிடைக்கும் என்பதும், பாதுகாப்பை பெருக்க கூடுதல் ஊசி தேவையா என்பதும் தெளிவாக இல்லை. - தேசிய தடுப்பூசி தகவல் மையம், அமெரிக்கா.
5. மஞ்சள்காமாலை நோய் கண்டு, அதிலிருந்து விடுபட்டவர்களின் வாழ்க்கை முழுக்க அந்நோய் திரும்ப தாக்காத அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உண்டாக்கப்படுகின்றது.
6. குழந்தை கருப்பையில் இருக்கும் காலத்திலே பாதிப்பு ஏற்பட்டு பிறக்கும் போது பாதிக்கப்பட்டு இருந்தால் இத்தடுப் பூசியால் எந்த ஒரு பயனும் இல்லை - சுக்கர்மேன்.
7. ஏற்கனவே ஒருவர் நோய் கொண்டு இருந்தால் அவருக்கும் இந்த தடுப்பூசியால் ஒரு பயனும் கிடையாது. - தேசிய மருத்துவ இதழ் 2001.
8. 1987ல் மரபீனிமாற்ற தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இத்தடுப்பூசியின் திறன் குறித்து தெளிவான விளக்கம் இல்லை: மேலும் குழந்தை பருவத்தில் கொடுக்கப்படும் இவ்வூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு கொடுக்கும், அவர்கள் பெரியவர்களாக வளர்ந்த பருவத்திலும் பாதுகாப்பை கொடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. குழந்தைகள் மீது பரிசோதிக்கவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
9. 14 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இத்தடுப்பூசி கொடுத்தால், அவர்களுக்கு நோய்தடுப்பைக் காட்டிலும் இவ்வூசியின் பின் விளைவுகள் காரணமாக இறப்போ/பிறபின் விளைவுகளோ ஏற்படுவது 3 மடங்கு அதிகமாக உள்ளது. - மருத்துவர். ஜேன் ஓரியன்ட்
10. அமெரிக்காவில் கட்டாயப் படுத்தப்படாத ஒரு தடுப்பூசியை, அங்கு விற்கமுடியாத, தேவைக்கதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியை மட்டுமின்றி இலாபமும் சம்பாதிக்க நினைப்பதை என்ன வென்று சொல்லுவது. கரிசனம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
.
இந்தியா போன்ற ஏழை (ஆக்கப்பட்ட) நாடுகளில் தடுப்பூசியின் பின்பிளைவுகளை ஆராய தொடர்ஆய்வு செய்யப்படாமல் போவதால் இத்தடுப்பூசியினால் ஏற்படும் பிரச்சனைகளும் பின் விளைவுகளும் பதிவு செய்யப்படாமல் உள்ளது. எனினும் பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களையாவது நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
.
நியூசிலாந்தில் மஞ்சள்காமாலை தடுப்பூசி திட்டத்திற்கு பின் அங்கே நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 60% உயர்ந்துள்ளது.- நியூசிலாந்து மருத்துவ இதழ், 1995.
.
1987 ம் ஆண்டு முதலே பல மருத்துவ உலக ஆய்வுகளில் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் காரணமாக நாட்பட்ட தன்நோய் எதிர்ப்புத்திறனை அழிக்கும் நோய்கள் நரம்பு மண்டலங்களை பாதிக்கும் நோய்கள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்படும். - மருத்துவர் பிலிப் இன்காவோ.
.
மஞ்சள் காமாலை தடுப்பூசியின் மோசமான பின்விளைவுகளை அறிய மே 1999ல் அமெரிக்க செனட்டின் துணைக்குழு கூட்டத்தில் 81 புகழ்பெற்ற மருத்துவ கட்டுரைகளிலிருந்து பின்வருவனவற்றை பட்டியலிட்டு கூறுகிறார். - மருத்துவர். பஸ்டன் ஏ. வெய்ஸ்பிரன்
.
1. வலிப்பு நோய்
2. முக ஜன்னி
3. இடுப்பு நரம்புவலி
4. கண்பார்வை பாதிப்பு
5. தண்டுவட பாதிப்பின் காரணமாக கை, கால் வாதத்தால் பாதிக்கப்படுவது
6. பல நரம்புகள் பாதிக்கப் படுதல்
7. தசைகளை தளர்த்தி பாதிக்கும் நோய்.
8. நரம்பு உறைகள் பாதிக்கப் படுதல்
9. மூளை, பிற நரம்பு மண்டலங்களை பாதிக்கும் ஒருவகை நோய்
10. நரம்புகளை பாதிக்கும் நோய்
11. மூளைக்காய்ச்சல்
12. கண்களை பாதிக்கும் நோய்
13. மூட்டுகளை பாதிக்கும் நோய்
.
இவை அனைத்தும் உலக மருத்துவ ஏடுகளில் மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்கள். தவிர பல இறப்புகளும் பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதிப்புகள் என்றால், ஏற்றுக் கொள்ளப்படாத பாதிப்புகள்..????
.
ஆக தீவிர மஞ்சள்காமாலை தடுப்பூசித்திட்டத்தை கைவிட்டு தேவைப்படுபவர்களுக்கு மட்டும் அதனைக் கொடுப்பது சிறந்தது. (அயோடின் சத்துக்குறைவு உள்ள இடங்களில் மட்டும் அயோடின் கலந்த உப்பு பயன்படுத்துவது நல்லது. எல்லோரும் அயோடின் கலந்த உப்பைத் தான் உட்கொள்ள வேண்டும் என்பது சரியில்லாதது).
.
மாற்று:அரசானது கருவுற்ற அனைத்துப் பெண்களையும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என அறிய Hbs Ag பரிசோதனை செய்வது மட்டும் நல்லது. பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்களின் குழந்தைகளுக்கு மட்டும். இத் தடுப்பூசி போடுவது நல்லது. இது பாதுகாப்பானது, விலையும் குறைவு, தேவையற்று அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுப்பது தவிர்க்கப்படுகிறது.
.
மேலும் இத்தடுப்பூசிகளை நம்மூரிலே தயாராகும் தரமான, குறைந்த விலையில் கிடைக்கும் மருந்துக் குழுமங்களிடமிருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும். யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதைக் காட்டிலும், யாருக்குக் கொடுக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

கொடுக்கக்கூடாதோர்
1. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படாத கருவுற்ற பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள்.
2. ஹெபாடைடிஸ் பி உள்ள குழந்தைகளுக்கு
3. முழுவளர்ச்சி இல்லாத குறைப்பிரசவ குழந்தைகளுக்கு
4. சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டு எடை குறைவான குழந்தைகள்
5. இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்
6. அதிக சளித்தொல்லையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு
7. ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளுக்கு
முக்கிய பிரச்சனை என்னவெனில் பெற்றோர் அனுமதியின்றி குழந்தைகளுக்கும் ஒப்புதல் இன்றி (அதன் சாதக/பாதங்களை விளக்கிய பின்னரும்?!) யாருக்கும் இதைக் கொடுக்ககூடாது.
.
இது "உரிமை மீறல்" பிரச்சனையாக பார்க்கப்பட வேண்டும். விஷயம் தெரிந்து கொள்வது சாதக/பாதகங்களை (விளக்கப்பட்டால் தானே?) தெரிந்த பின்னர் தன் உடல்நலன் குறித்தான முடிவெடுக்கும் உரிமைகள் நோயாளிகள்/மக்கள் தெரிந்து பின்பற்றுவது முக்கியமானது. குறிப்பாக இந்தியாவில் பலரும் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டு, எடைக்குறைந்தும், இரத்த சோகையால் பாதிக்கப்பட்டும் இருக்கும் தற்போதைய சூழலில் அனைவருக்கும் தடுப்பூசி என்பது கொஞ்சம் கூட பொருந்தாத ஒன்று.
.
யாருக்கு கொடுக்கவேண்டும் - அமெரிக்க நோய் தடுப்புதுறை.
1. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு
2. விபரீதமாக இரத்தம் ஒருவர் உடம்பில் கலக்கும் போது (இது பரிசோதிக்காத இரத்தம் ஒருவர் உடம்பில் ஏற்றுகையில் இதன் பாதிப்பு வரலாம்)
3. ஹெபாடைடிஸ் பி உள்ள ஒருவரிடத்து உடலுறவு கொள்ளும் போது இதன் பாதிப்பு ஏற்படலாம்.
4. குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஹெபாடைடிஸ் பி மஞ்சள் காமாலையின் பாதிப்பு இருக்கையில் அக்குடும்பத்திலுள்ள 1 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு அதன் பாதிப்பு ஏற்படலாம் என்பதற்காக கொடுக்கலாம்.
.
அரசு சுகாதாரத்திற்கென ஒதுக்கும் நிதி முறையாக பயன்படுத்தப்பட வேண்டும். மஞ்சள் காமாலை தடுப்பூசியை பொறுத்த வரை மருத்துவர்களால்/மருந்து குழுமங்களால் உருவாக்கப்படும் தேவையற்ற, பொய்யான மாய வலையில் சிக்காமல், இந்நோய் பரவ முக்கிய காரணமாக நீர், இரத்தம்/இரத்தப்பொருட்கள் ஒருவருக்கு ஏற்றுகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய உரிய பாதுகாப்புகள், பொதுவான நோய் எதிர்ப்பு சக்தியை அனைத்து மக்களும் பெற, அனைவருக்கும் (குறிப்பாக ஏழைகளுக்கு) அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் திட்டங்கள் (அனைவருக்கும் உரிய இடம், உண்ண சத்தான உணவு (வறுமை நீங்கி) அனைவருக்கும் வேலை-வேலைக்கேற்ற, ஆண் - பெண் பாகுபாடு இன்றி கிடைக்கக்கூடிய உரிய கூலி, வேலைப்பாதுகாப்பு, நிரந்தர வேலை, தொழிலாளர் உரிமை பாதுகாக்கப்படல்), உடுக்க உடை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்வதே நிரந்தர தீர்வை நோக்கிய பாதையாக அமையும்.
.
தடுப்பூசிகளை விடவும் இவை முக்கியமானவை. நீண்ட கால, நிரந்தர தீர்வைப் பற்றியான கண்ணோட்டத்துடன் பார்த்தால் அவை செலவு குறைந்தும் இருப்பது தெளிவாக புரியும்.
.
தடுப்பூசி/மருந்தின் சாதக பாதங்களை விளக்கி, பின் மக்கள்/நோயாளிகள் கொடுக்கும் ஒப்புதல் இல்லாமல் குழந்தைக்கோ/பெரிய வருக்கோ தடுப்பூசி கொடுத்தால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சட்டப்படி மருத்துவர்களும், மேலும் அத்தடுப்பூசியை உயர்த்திப் பிடிக்கும் மருந்து உற்பத்தியாளர்களோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ, ஏன் அரசோ பொறுப்பேற்க வேண்டும்.
.
பிரான்ஸ் நாட்டு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஹெபாடைடிஸ் பி மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டம், அவ்வூசி "Multiple Sclerosis" எனும் நரம்புமண்டலத்தை பாதிக்கும் வியாதியை ஏற்படுத்தியதின் விளைவாக நிறுத்தப்பட்டது.
.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் இத்தடுப்பூசியின் விளைவாக நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வியாதியால் பாதிக்கப்பட்டதால், இங்கிலாந்தின் ஸ்மித்கிளைன் பீச்சம் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் அவ்விருவருக்கும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
.
அமெரிக்காவில் மட்டும் 1990-1998-க்கு இடைப்பட்ட காலத்தில் 17,497 பேர் காமாலை தடுப்பூசியின் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 5,983 பேர் உயிரை பாதிக்கும் அளவிற்கு, மருத்துவமனையில் அவசியம் சேர்ப்பதற்கு, நிரந்தர உடல் ஊனத்திற்கோ, இறப்பு ... முதலியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
.
மெர்க் நிறுவனத்திற்கு மட்டும் இத்தடுப்பூசி விற்பனையின் விளைவாக ஓராண்டில் கிடைக்கும் பணம் -சுமார் 4500கோடி ரூபாய்.
மருத்துவர் போனி டன்பர் - உடல் செல்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தான ஆய்வில் மிக முக்கியமானவரான மஞ்சள் காமாலை தடுப்பூசிக்கு பிறகு பலரும் இறப்பு உட்பட மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், எனத் தெளிவாக கூறியுள்ளார்.
.
அக்டோபர் 1998ல் பிரான்சு சுகாதார அமைச்சகம் குழந்தைகளுக்கு கட்டாயமாக கொடுத்து வந்த மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தை கைவிட்டது.
.
தமிழ்நாட்டில் ஆகஸ்டு 2004ல் சேலத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுத்து பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டினம் குப்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் தீபனுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசியின் காரணமாக வலிப்பு நோய் வந்துள்ளது.
1990ல் இங்கிலாந்தில் 598 மருத்துவர்களை உள்ளடக்கிய ஆய்வில் 50% மருத்துவர்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட மறுத்துள்ளனர். அரசு மருத்துவர்களுக்கு இந்நோய் பரவும் அபாயம் இருப்பதை சுட்டிக் காட்டியும் 50% பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். - இங்கிலாந்து மருத்துவ இதழ்.
.
மஞ்சள் காமாலை தடுப்பூசியானது, மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டவரின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. அவர்களுக்கு எய்ட்ஸ் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் ஊசி போடப்படுபவர்களுக்கும் எய்ட்ஸ் தொற்றும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தின் விளைவாகவே எய்ட்ஸ் திட்டமிட்டு பரப்பப்பட்டது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ பகுதிகளில் தான் அமெரிக்காவில் முதலில் மஞ்சள் காமாலை தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
.
அமெரிக்காவில் இப்பகுதிகளில் தான் எய்ட்ஸ் தாக்கம் அதிகம் இருந்ததாக ஆதாரங்கள் உள்ளன.
.
பெரும்பாலான குழந்தைகளைப் பொறுத்தவரை, காமாலை தடுப்பூசியில் கிடைக்கும் பாதுகாப்பைக் காட்டிலும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் 100 மடங்கு அதிகம். - மருத்துவர். ஜேன் ஓரியன்ட்.
.
1991ல் மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுக்கப்பட்ட 358 காம்பிய குழந்தைகளில் 20% பேருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவரான நான் கல்பாக்கம் கதிர்வீச்சின் பாதிப்பை எலும்பு மஜ்ஜை புற்றுநோய், இந்தியாவிலே, கல்பாக்கத்தில் அதிகம் என்றும், அதற்கான காரணம் இங்குள்ள கதிர்வீச்சுதான் என புள்ளிவிபரங்களுடன் நிறுவிய பின், அதுவரை பெருமளவில் சுற்றுப்புற மக்களுக்கு ஒன்றும் செய்யாத அணுசக்தி நிர்வாகம், பல மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தியது (என்னை ஓரங்கட்ட) அதில் மஞ்சள் காமாலை தடுப்பூசியை இலவசமாக பலருக்கும் கொடுத்தது (கெடுத்தது) தான் வேடிக்கை.
.
எனினும், அம் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்ட பல அணுசக்தி துறை மருத்துவர்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை, என்பதும் குறிப்பிடத்தக்கது.

-மரு. வீ. புகழேந்தி, MBBS
நன்றி: புதிய தென்றல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக