வியாழன், பிப்ரவரி 12, 2009

ஒரே குரலில் 'இந்து' - கலைஞர் கருணாநிதி - வீரமணி

ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசின் ராணுவப் படுகொலையை வெளிப்படையாக ஆதரித்து இலங்கை அரசின் இரண்டாவது தூதரகமாக செயல்பட்டு வரும் 'இந்து' நாளேடு அண்மையில் தி.மு.க. செயற்குழு மேற்கொண்ட முடிவுகளை மனம் குளிர பாராட்டி வரவேற்று தலையங்கம் தீட்டியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியும் இந்தப் பிரச்சினையில் மிகவும் உள்ளத்தைத் தொடக்கூடிய அரசியல் மேன்மை மிக்க செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக 'இந்து'வின் தலையங்கம் கூறுகிறது (பிப்.4). சிறிலங்காவில் நடக்கும் சம்பவங் களை எதிர்கொள்வதில் மிகவும் நிதானத்தோடு அளந்து செயல்படுவதோடு தனது மேதைமையான முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அந்தத் தலையங்கம் கூறுகிறது...
"Between them, the Dravida Munnetra Kazhagam government in Tamil Nadu and the United Progressive alliance at the Centre have shown impressive political statesmanship and footwork in responding to the challenge of digesting and responding soberty to what is happening in Sri Lanka."

மேலும் அத்தலையங்கத்தில், "தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் போர் நிறுத்தம் கோருகின்றன; விரல்விட்டு எண்ணக்கூடிய குழுக்கள் வன்முறை யில் ஈடுபட்டு வருகின்றன; தமிழகத்தின் கொந்தளிப்பான இச்சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி, தனது கவலை தமிழ் மக்களைப் பற்றித் தானேயொழிய விடுதலைப் புலிகளைப் பற்றியல்ல என்று திட்ட வட்டமாக சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப் படுத்திவிட்டார். அதுமட்டுமல்ல; கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப்புலிகள் நடத்தி வரும் சகோதர யுத்தத்தையும், முரட்டுத்தனமான கொள்கைகளையும் மிகவும் துல்லியமாக விமர்சித்துள்ளார். கடந்த செவ்வாய்க் கிழமை தி.மு.க. செயற்குழு நிறைவேற்றிய மூன்று அரசியல் தீர்மானங்கள் இலங்கை இனப்பிரச்சினையில் இதுவரைத் தமிழகம் முன் வைத்த கோரிக்கைகளிலிருந்து மாறுபட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானங்களாகும். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. வின் எதிர்பார்ப்பையும் முன் வைக்கும் பிரச்சாரத்தையும், தி.மு.க. செயற்குழு தெளிவாக திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. விடுதலைப் புலிகள் பற்றி எதுவும் குறிப்பிடாமல், அப்பாவி தமிழ் மக்களின் பாதுகாப்பும் நலன்களும் பாதுகாக்கப்பட்டு, சுமூகமான நிலை திரும்ப வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவின் தீர்மானம் கூறுகிறது. வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து, சுயாட்சி வழங்கும் வகையிலான அரசியல் தீர்வை (ஒன்றுபட்ட இலங்கைக்குள்) இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று அத் தீர்மானம் கூறுவதோடு, இந்த இலக்கை அடைவதற்கு சிறீலங்கா அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இதில் தமிழ்நாடு அரசினை பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய அம்சம் வேகம் பெற்று வரும் ஒரு பிரச்சினையில் - மத்திய அரசோடு தன்னையும் இணைத்துக் கொண்டு எதிர்காலத்துக்கான தீர்வை முன் வைத்துள்ளதுதான்!

(A commendable feature of the Tamil Nadu Government's response is the forward looking way in which it has teamed up with the Central government in responding to a fast-developing situation.)

பிரணாப் முகர்ஜியின் அறிவார்ந்த நடுநிலையான அணுகுமுறையைப் பாராட்ட வேண்டும். அவர் கொழும்பு சென்று, ராஜபக்சேயை சந்தித்து, இந்தப் பிரச்சினையை சாதுர்யத்தோடு கையாண்டதே இதற்கு காரணம். இதன் காரணமாகத்தான் மாநில அரசும், மத்திய அரசும் தங்களை ஓரணியாக்கிக் கொண்டுள்ளன. விடுதலைப் புலிகளின் கடந்தகால தவறுகள் பற்றி உணர வைத்து, எதிர்கால அமைதித் தீர்வை நோக்கி மத்திய மாநில ஆட்சிகளை திரும்பச் செய்துள்ளது - என்று 'சிறிலங்கா ரத்னா' விருதைப் பெற்ற 'இந்து' ராம் தனது ஏட்டின் தலையங்கத்தில் பாராட்டு மழையில் தி.மு.க.வை மூழ்க செய்து விட்டார்.

மத்திய காங்கிரஸ் ஆட்சியின் கொள்கையோடு தி.மு.க. தன்னையும் இணைத்துக் கொண்டு விட்டது என்பதே 'இந்து'வின் மய்யமான கருத்து. பார்ப்பன 'இந்து' ஏட்டிடமிருந்து கிடைத்துள்ள இந்த சான்று ஒன்று மட்டுமே தி.மு.க. மேற்கொண்ட துரோகத்தை வெளிப்படுத்துவதற்கு போதுமான தாகும்.

'இந்து' ஏடு போற்றிப் பாராட்டும் ஒரு தீர்வு திட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி யும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். 'இந்து' ஏடு எதை ஆதரிக்கிறதோ, அதை எதிர்த்து எழுதினாலே போதும் என்று பெரியார், தாம் 'விடுதலை' ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது தனக்கு ஆலோசனை கூறியதாக கி.வீரமணி அடிக்கடி கூறுவார். இப்போது 'இந்து' ஏடு பார்ப்பன வெறியோடு முன் வைக்கும் கருத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு 'கலைஞரின் தூதுவராக' வீரமணி களமிறங்கியிருப்பதை தமிழின உணர்வாளர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தி.மு.க. உருவாக்கியுள்ள 'இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை' நடத்தும் பிரச்சாரத்தில் தன்னை யும் இணைத்துக் கொண்டு தீவிரப் பிரச்சார பீரங்கியாக மாறி நிற்கும் கி.வீரமணி, கடந்த காலங்களில் எத்தகைய கருத்துகளை முன் வைத்தார்? துரோக காங்கிரசாரிடம் தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே கூட்டு சேரக் கூடாது என்று கூறி, திராவிட கட்சிகள் ஓரணியில் சேர்ந்து போட்டியிட வேண்டும் என்று 'திராவிட பார்முலாவை' அன்று முன் வைத்த கி.வீரமணி, இப்போது காங்கிரசின் பச்சை துரோகத்துக்கு நடை பாவாடை விரிக்கும் தி.மு.க. வோடு கைகோர்த்துக் கொண்டு காங்கிரசாரோடு ஒரே மேடையை பகிர்ந்து கொண்டு பேசி வருவதற்குப் பெயர் என்ன? தமிழர்களுக்கு எதிராக காங்கிரசின் பச்சை துரோகத்தை எதிர்த்து, தமிழகமே கொந்தளிக்கும் சூழ்நிலையில் கி.வீரமணி யின் காங்கிரசு எதிர்ப்பு முழக்கம் எங்கே போனது? ஏன் வாயடைத்துப் போனது? இதோ, உதாரணத் துக்கு ஒன்றை மட்டும் சுட்டிக் காட்டுகிறோம்:

"திராவிட இயக்கங்களான அரசியல் கட்சி களுக்கு நமது கனிவான வேண்டுகோள் என்ன வென்றால், மீண்டும் காங்கிரசுடன் சேருவது பற்றி சிந்திப்பதை ஒரு புறத்தில் தள்ளி வைத்து, நாடாளு மன்றத்திற்கான 40 இடங்களுக்கும் (புதுவை உட்பட) நீங்கள் ஒரு தொகுதி உடன்பாட்டிற்கு ஏன் முயற்சிக்கக் கூடாது? திராவிட பார்மூலா என்று நாம் முன்பு வற்புறுத்தியதையே மீண்டும் நினைவூட்டு கிறோம்; இதை அசை போட்டுச் சிந்தியுங்கள். அதற்கான வாய்ப்பு உருவாகும் என்று குறிப்பிட் டுள்ளோம். இப்போது அதற்கான வாய்ப்பு வந்துள்ளது.

ஒத்த கருத்துள்ளவர்கள் ஏன் ஓரணிக்கு வரக்கூடாது?

மொழி (இந்தி)ப் பிரச்சினை, மாநில சுயாட்சி, திராவிடப் பண்பாட்டினை காத்தல், காவிரிப் பிரச்சினை, ஈழத் தமிழர் இனப் படுகொலை தடுப்புப் பிரச்சினை இவைகளில் உங்களால் ஒத்தக் கருத்து கொள்ள முடிகிறது; அகில இந்திய கட்சிகளால் அப்படி அதனை செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை. அத்தகையவர்களுக்கு விட்டுக் கொடுத்து அவர்களோடு தொகுதி உடன்பாடு காண முயலும்போது, 25 ஆண்டுகள் நேற்று வரை ஒரே அணியில் இருந்து கோபதாபங்கள் காரணமாகப் பிரிந்த நீங்கள், மிகப் பெரும் பகையாளர்கள் போல் எவ்வளவு காலத்திற்குக் கட்சி நடத்தப் போகிறீர்கள்? ('விடுதலை' 10.3.96)
- என்று அன்று கி.வீரமணி எழுதினார். காங்கிரசை தனிமைப்படுத்த அன்று குரல் கொடுத்தவர். இன்று தமிழகத்தின் உணர்வாக அந்தக் கருத்து உருவாகும் போது தி.மு.க.வுடன் சேர்ந்து காங்கிரசுடன் கை குலுக்குவது, தமிழினத் துரோகம் அல்லவா?

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சர்வாதிகாரி என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தி.மு.க. ஆதரிக்கவில்லை என்றும் முதல்வர் கலைஞர் கருணாநிதி செயற்குழுவில் பேசியிருக்கிறார். இதைக் கண்டிக்காத வீரமணி, தி.மு.க. அமைத்துள்ள குழுவிலும், இடம் பெற் றுள்ளார். அப்படியானால், பிரபாகரன் சர்வாதிகாரி என்ற முதல்வர் கலைஞர் கருணாநிதி கருத்தை கி.வீரமணி ஆதரிக்கிறாரா? இல்லை என்றால், அதை இதுவரை மறுத்து எழுதாதது ஏன்? தி.மு.க.வின் துரோகப் பாதை தான் தி.க.வின் பாதையா?

1991 இல் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியாவில் அய்க்கிய முன்னணி ஆட்சி நீட்டித்தது. அப்போது தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியே நடந்தது. அப்போது இதே கி.வீரமணி என்ன எழுதினார்? விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீடிக்கக் கூடாது என்று எழுதினார்.

"ஏனைய போராளிக் குழுக்களில் பலவும் தாராளமாக தமிழ்நாட்டில், இந்தியாவில் நடமாட உரிமைகள் அளித்து விட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பினை மட்டும் தடை செய்வது ஏன்?"
- என்று கேட்ட வீரமணி, அப்போது தமிழகத்தில் இருந்த கலைஞர் கருணாநிதி அரசும் இதற்கு உடன்பட்டு பழியை சுமக்கக்கூடாது என்று எழுதினார்.

"மத்திய அரசு - அய்க்கிய முன்னணி அரசு முந்தைய அதிகார வர்க்கம் விரித்த வலையில் வீழ்ந்து, அவகீர்த்தியைத் தேடிக் கொள்வதும் தமிழக தி.மு.க ஆட்சி - கலைஞர் அரசு இதில் பழியைச் சுமப்பதும் தேவையற்ற ஒன்று என்பது நமது உறுதியான கருத்து. ('விடுதலை' 15.6.96)

1996 இல் வெளியிடப்பட்ட உறுதியான கருத்து. இப்போது தி.மு.க. தலைமை விடுதலைப் புலிகளையும், அதன் தலைவரையும் இழிவுபடுத்திப் பேசும்போது எங்கே போய் பதுங்கிக் கொண்டது?

மத்திய அரசின் கொள்கையோடு தி.மு.க. தன்னையும் இணைத்துக் கொண்டுவிட்டதாக 'இந்து' பார்ப்பன ஏடு கலைஞர் கருணாநிதியை பாராட்டி மகிழ்கிறது.

'இந்து' பார்ப்பன ஏட்டின் கருத்துகளை எதிர்ப்பதே பெரியார் கற்றுத் தந்த அணுகுமுறை என்று கூறி வந்த கி.வீரமணி, இப்போது 'இந்து'வின் பாராட்டைப் பெறும் கலைஞர் கருணாநிதியோடு கரம்பிடிக்க நின்று கொண்டிருப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா?

திராவிடர் கழகத்தில் இன்னும் மிச்சம் மீதியுள்ள உணர்வுள்ள இளைஞர்களைக் கேட்கிறோம்,

கி. வீரமணியின் இந்த துரோகத்தை இன்னும் ஏற்றுக் கொள்ளப் போகிறீர்களா? காங்கிரஸ் கட்சித் தொண்டன்கூட இன துரோகத்தை எதிர்த்து, அக்கட்சியைக் கண்டித்து, தீக்குளிக்கும் போது பெரியார் தொண்டர்களே இந்த துரோகத்தைத் தட்டிக் கேட்காமல் வாய் மூடி நிற்கப் போகிறீர்களா? அல்லது 'உலகத்தின் ஒரே தமிழர் தலைவர் எங்கள் தலைவர்' என்று மீண்டும் பஜனைப் பாடல்களைப் பாடப் போகிறீர்களா?

நன்றி: பெரியார் முழக்கம்

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மானமும் அறிவும்
மனிதனுக்குத்தான் அழகு

கருணாநிதிக்கும்
வீரமணிக்கும் அல்ல...

பெயரில்லா சொன்னது…

MK, Veeramani Ellarum ippa congress party members. Tamil nadu congress leader is mk.
probaganda secretary is veeramani. I do not know VDEERAMANI'S initial ( K or mk). Now the problem is not rajapakse. Prabaharan is the point of talk for MK.
We still belive these guys as our leader.

பெயரில்லா சொன்னது…

தமிழ் ஓவியா இங்கு வந்து கருத்து சொல்லவும்.

தமிழ் ஓவியா சொன்னது…

ஏற்கனவே எனது வலைப்பூவில் தமிழ் என்ற நன்பர் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்துள்ள பதிலை அப்படியே தருகிறேன்.
பெயரில்லா அவர்களின் விருப்பத்தையும் இதன் நிறிவேற்று வதில் மகிழ்ச்சி.

இதோ எனது பதில்:

" தமிழ் ஓவியா கூறியது...

Tamil அவர்கள் நமது தோழர் ஒருவர் எழுதிய கட்டுரை எடுத்துப் போட்டு உங்கள் பதில் என்ன? என்று கேட்டிருக்கிறார்.

இதில் உள்ளவைகளுக்கு வரிக்கு வரி பதில் சொல்ல முடியும். அப்படி ஒரு சகோதர யுத்த விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை.

எதையும் எந்த நேரத்திலும் எதிர்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்குத் தேவை காரியம் நடக்க வேண்டும். பெரியார் இந்த அணுகுமுறையைத் தான் கையாண்டார், வீரமனியும் இதே அணுகுமுறையைக் கைYஆண்டு கொண்டிருக்கிறார் என்பது எனது கருத்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அணுகுமுறை இருக்கும் அதை குறை சொல்லிக்கொண்டு காரியத்தைக் கெடுத்துவிடக்கூடாது.
அந்த வகையில் தாங்கள் கேட்ட்ட அய்யங்களுக்கு வீரமணி வர்கள் தரும் விளக்கத்தை உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறேன்.

"இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டுமென்ற
குடியரசுத் தலைவரின் உரை வரவேற்கத்தக்கது!

தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே மத்திய
அரசின் கொள்கை குடியரசுத் தலைவர் உரையாக வெளிவந்துள்ளது

நாம்அனைவரும்ஒன்றுபட்டுகுரல்கொடுப்போம்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

இலங்கையில் போர் நிறுத்தப்படவேண்டும் என்ற இந்தியக் குடியரசுத் தலைவரின் உரையை வரவேற்று, கட்சிகளுக்குள் நடக்கும் போரை நிறுத்தி, ஒன்றுபட்ட முறையில் குரல் கொடுப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அறிக்கை வருமாறு:-

நமது குடியரசுத் தலைவர் உரை என்பது மத்திய அரசின் கொள்கைத் திட்டங்களின் அறிவிப்பு ஆகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்!

மத்திய அமைச்சரவை கூடித்தான் குடியரசுத் தலைவர் உரையைத் தயாரிக்கும். எனவே, மத்திய அரசின் கொள்கைப் பிரகடனம் ஆகும் அது.

குடியரசுத் தலைவரின் கூற்று

அவ்வுரையில் நமது குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாட்டீல் அவர்கள், ஈழத்தில் நடைபெறும் போரை நிறுத்தவேண்டும் என்று இலங்கை அரசுக்கும், போராடும் விடுதலைப்புலிகளுக்கும் அறிவுறுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் போரை உடனே நிறுத்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவேண்டும் என்று திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.

ராணுவ ரீதியான சண்டைகளால் இலங்கையில் இடம் பெயர்ந்துள்ள மக்களின் வேதனைகள் எங்களுக்கு (இந்திய அரசுக்கு - மக்களுக்கு) மிகுந்த மனக்கவலையை அளித்து வருகின்றன; இலங்கை ராணுவமும், விடுதலைப்புலிகள் இயக்கமும் உடனடியாக பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டும், இராணுவம் தனது தாக்குதல்களை நிறுத்தவேண்டும், விடுதலைப்புலிகள் தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும், அப்பொழுதுதான் ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குட்பட்ட அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைக்குத் தீர்வு காண முடியும் என்பதுதான் இந்திய அரசின் நிலை என்று குறிப் பிட்டுள்ளார்கள்.

முதல்வருக்கு மருந்தில்லா மருந்து

மத்திய அரசின் இந்நிலைப்பாட்டில் (1) போர் நிறுத்தம் உடனே ஏற்படவேண்டும்; (2) இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று குறிப்பிடப்பட்டதானது, மருத்துவமனையில் இருந்துகொண்டே, ஈழத் தமிழர் பிரச்சினையின் காரணமாக உடல் உபாதைகளுடன் உள்ளத்தில் வலி மிகவும் என்ற நிலையில், அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறிவரும் நமது தமிழினத் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இந்திய அரசின் இந்தத் திட்டவட்டமான கொள்கை அறிவிப்பு சரியான, மருந்தில்லா மருந்தாகப் பயன்பட்டிருப்பது அறிய நமக்கு ஆறுதல் ஏற்படுகிறது.

முதலமைச்சரின் வரவேற்பு

முதலமைச்சரே நேற்று அந்நிலையிலும் அவ்வுரை கேட்டு (12.2.2009) அன்றே விடுத்துள்ள ஓர் அறிக்கையில்,

இன்று (12.2.2009) நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியக் குடியரசுத் தலைவர், தமது உரையில், இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்றும்; பிரச்சினைக்கு அமைதியான முறையில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தைகள்மூலம் தீர்வு காணவேண்டும் என்றும் குறிப்பிட்டிருப்பது;
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரும் எனக்கு மிகுந்த ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமைந்துள்ளது (முரசொலி, 13.12.2009) எனக் குறிப்பிட்டுள்ளார்!

அறுவை சிகிச்சை நடந்ததோ 11 ஆம் தேதி, 12 ஆம் தேதி மதியமே இப்படி மருத்துவமனையிலிருந்து ஒரு முக்கிய வரவேற்பு அறிக்கை விடுத்திருப்பது அவர் களுக்கு உள்ள கவலை, அக்கறை எப்படிப்பட்டது என்பதை உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர் கள் வரை அறிவதற்கான சான்று அல்லவா?

மூன்று முக்கிய கருத்துகள்

குடியரசுத் தலைவரின் இவ் வுரையில் - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மூன்று முக்கிய கருத்துகள் தெளிவாகின்றன.

1. உடனே போர் நிறுத்தம்

2. அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை

3. சிங்கள அரசும் - விடுதலைப்புலிகளும் பேசவேண்டும்

விடுதலைப்புலிகளைத் தவிர்த்த பேச்சுவார்த்தை பலன் தராது

விடுதலைப்புலிகளை ஒதுக்கிவிட்டு பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு என்பது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைப் பிரச்சினையில் உண் மைத் தீர்வாகாது என்பது இதன்மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி, அதே சாக்கில் தடை செய்து, அவர்களுக்குப் போட்டியான சில சோளக்கொல்லை பொம்மை போன்றவர்களை வைத்து ஒப்புக்குக் காட்டினால், உறுபயன் விளையாது என்பதை அங்கே கிழக்கு மாகாணத்தில் நடக்கும் அரசியலைப் பார்த்தாலே புரியும்.

இப்போது பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பது 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு - எந்த நிலையில் தந்தை செல்வா போன்றவர்கள் தனி ஈழம் என்ற பிரிவினை கேட்கவேண்டிய அவசியத்திற்குத் தள்ளப்பட்டார்கள் என்ற சரித்திரம் அறிந்தவர்களுக்கு ஒரு செய்தி - இங்குள்ள பலர் அறியாத செய்தி - விடுதலைப்புலிகள்தான் ஏதோ தனி நாடு - பிரிவினை கேட்கத் தொடங்கியவர்கள் என்ற ஒரு தவறான எண்ணத்தை மனதிற்கொண்டு - சில அரைவேக்காடுகள் உள்பட ஆதாரமில்லாப் பிரச்சாரம் செய்கின்றன!

போர் நிறுத்தப்படவேண்டும்

அரசியல் தீர்வுபற்றி பேச்சுவார்த்தை நடந்து நிரந்தரத் தீர்வு காண இரு தரப்பினர் மேஜையில் அமர்ந்து பேசிடும் நிலையில், எந்த முறையில் அரசியல் தீர்வு என்பதை அந்த மக்களின், பிரதிநிதிகள் தான் தீர்வு காண முடியுமே தவிர, வெளியில் உள்ளவர்களான வெளிநாட்டவர்களின் கருத்துத் திணிப்பு பயன் பெறாது; இப்போது அதுவல்ல பிரச்சினை. உடனே போர் நிறுத்தப்பட்டு அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக (மருத்துவமனைகள்மீது குண்டுவீசப்பட்டு சிகிச்சை பெறும் தமிழர்கள் உள்பட) பொதுமக்கள் காக்கை குருவிகளைப் போல் குண்டுமழையால் கொல்லப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டாகவேண்டும்.

நிபந்தனை இல்லாத போர் நிறுத்தம்தான் உடனடித் தேவை.

வெறும் இராணுவ நடவடிக்கையால் எவ்விதப் பலனும் ஏற்படாது.

ராஜபக்சேயின் கூற்று - உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது

விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்துவிட்டு பிறகு அரசியல் தீர்வு என்ற இலங்கை ராஜபக்சே அரசின் நாடகக் கூற்று உலக மக்களுக்கு ஏற்புடைத்தது அல்ல.

இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலை என்பதை உலகம் - உலக நாடுகள் - உணரத் தொடங்கிவிட்டது. எனவே, இந்நிலையில், மேலும் பழைய பல்லவியை இலங்கை அரசு பாடிக்கொண்டே இருப்பதால், பலனேதும் விளையாது.

தமிழ்நாடு அரசு காரணம் அல்லவா!

தமிழ்நாட்டில் உள்ள இன உணர்வாளர்களே, உங்கள் மனச் சாட்சிப்படிக் கூறுங்கள்.

இந்த அளவுக்கு இந்தியப் பேரரசு கொள்கை முடிவு (ளுவயனே) கூறும் அளவுக்கு நிலைமை வளர்ந்தது எதனால்? யாரால்?

தமிழக முதல்வர் கலைஞர்தம் அரசு, கட்சி - கூட்டணியில் மத்திய அரசில் இடம்பெற்று, அவர்களையும் வற்புறுத்தி அழுத்தம் கொடுத்ததால்தானே இது சாத்தியமாயிற்று?

இவரது தொடர் வற்புறுத்தல்கள்தானே இந்த விளைவை - விளைச்சலை முளைக்கச் செய்துள்ளது?

இந்நிலையில், முதல்வரை - தமிழக அரசைக் கண்டிப்பதால், குறைகூறுவதால் என்ன பயன்? மத்திய அரசு சொல்லும்போது தானே அது உலக நாடுகளின் மத்தியில் - ஏன் இலங்கைக்குக்கூட அந்த அழுத்தம்தானே ஆக்க ரீதியான பயன் தரும்?

தமிழ்நாட்டுக் காங்கிரசுகாரர்களுக்கு...

தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்களும் இதனைப் புரிந்து கொண்டு நிதானத்துடன் இப்பிரச்சினையை அணுகக் கடமைப்பட்டுள்ளார்கள்!

அதேபோல, மத்திய அரசின் தலைவர்களைப் பழிப்பது, கொச்சைப்படுத்துவது போன்ற அடாவடித்தனத்தில் இறங்கிடும் பொறுப்பற்ற வீண்செயல்கள், தேவையற்ற விளைவுகளை உருவாக்கி, வெண்ணெய் திரண்டு வருகையில் தாழியை உடைக்காமல் இருப்பது அவசரம் - அவசியம்!

தமிழக அரசும், மத்திய அரசும் இரண்டும் இந்நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை நாம் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து மேலும் வலிமையாக்கி அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கி உரிமை முழக்கம் செய்வோம்!

தேவை நமக்குள் போர் நிறுத்தம்

நமக்குள் போர் நிறுத்தம் தேவை! தேவையற்ற விமர்சனங்கள் தவிர்க்கப்படுவது பிரச்சினையின்மீது அக்கறையுள்ளவர்களின் தலையாயக் கடமையாகும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


---"விடுதலை"13.2.2009"

அய்யா பெயரில்லா ஈழப்பிரச்சினை தொடர்பாக தமிழ் ஓவியா வலைப்பூவில் வந்துள்ள செய்திகளை ஒரு பார்வை பார்த்தி விடவும்.

மிக்க நன்றி

பெயரில்லா சொன்னது…

Desclaimer: The following questions are from mind. தமிழ் ஓவியா can say I am a pappan so I have to tell my caste... Naickker from Kovai.

//தமிழ் ஓவியா சொன்னது…
எதையும் எந்த நேரத்திலும் எதிர்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.//
Modi is doing good in Gujrat now. There is no mass killings last 2 or 3 years ....so you can support Modi now.


//தமிழ் ஓவியா சொன்னது…
நமக்குத் தேவை காரியம் நடக்க வேண்டும். பெரியார் இந்த அணுகுமுறையைத் தான் கையாண்டார், வீரமனியும் இதே அணுகுமுறையைக் கைYஆண்டு கொண்டிருக்கிறார் என்பது எனது கருத்து. //
This is the point. Next time Jaya comes to power, you will support Jaya. So Periyar made money...You are multiplying the money ...Too good business.

//தமிழ் ஓவியா சொன்னது… ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அணுகுமுறை இருக்கும் அதை குறை சொல்லிக்கொண்டு காரியத்தைக் கெடுத்துவிடக்கூடாது.//
Yes....Muslims, christians and Hindu's all has own way why are you attacking MOSTLY hindu's and soft corner for other religious.

Muslim league is not releigios party but anything related/supported by any hindu organization are religious and should be targetted by DK. This is policy of DK?


//தமிழ் ஓவியா சொன்னது…
இப்போது பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பது 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு - எந்த நிலையில் தந்தை செல்வா போன்றவர்கள் தனி ஈழம் என்ற பிரிவினை கேட்கவேண்டிய அவசியத்திற்குத் தள்ளப்பட்டார்கள் என்ற சரித்திரம் அறிந்தவர்களுக்கு ஒரு செய்தி - இங்குள்ள பலர் அறியாத செய்தி - விடுதலைப்புலிகள்தான் ஏதோ தனி நாடு - பிரிவினை கேட்கத் தொடங்கியவர்கள் என்ற ஒரு தவறான எண்ணத்தை மனதிற்கொண்டு - சில அரைவேக்காடுகள் உள்பட ஆதாரமில்லாப் பிரச்சாரம் செய்கின்றன!//

MK said LTTE killed brotherhood organizations and DMK is not going to support. What is the exact opinion of Veeramani & தமிழ் ஓவியா. We donot want any long answers ...we only want direct answers.

பெயரில்லா சொன்னது…

மத்திய மந்திரி சபையிலே பங்கேற்பிகளா
என்ற கேள்விக்குவானத்தை பார்க்க வானத்திற்கே
போக வேண்டியதில்லை என்று ஒரு காலத்தில்
கூறியவர் கலைஞர் .ஆனால் இப்போது குடும்ப பாசம்
அல்லது குடும்ப பணத்தை பாதுகாக்க போட வேண்டிய வேஷம்
அவரது மனசாட்சியை மழுங்கடித்து விட்டது

தமிழ் ஓவியா சொன்னது…

கோவை தாமு எனது கருத்தைத் திரிக்கிறார்.

மோடி குஜரத்தில் நடைபாதை கோயில்கள் எல்லாம் இடித்த போது பாராட்டினோம்.

நரபலி வேட்டை நடந்த போது கண்டித்தோம்.

ஜெயலலிதா சங்கராச்சாரியைக் கைது செய்த போது பாராட்டினோம்.

ராமன் கோயில் இங்கு கட்டாமல் எங்கு கட்டுவது என்ற போது கண்டித்தோம்.

இதற்காக ஒட்டு மொத்தமாக யாரையும் எதிர்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று நான் எழுதிய கருத்தை திரிக்கும் கோவை தாமுவை வண்மையாகக் கண்டிக்கிறேன்.

இது போல் தான் தாமுவின் மற்ர விமர்சனமும் இருக்கிறது.

உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாகச் சிந்தியுங்கள்.

நன்றி

கருத்துரையிடுக